டெல்லியில் விவசாய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உரிய முறையில் அமலாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் விவசாய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்த உள்ளன. 75 மணி நேரம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி – ஹரியானா எல்லைப் பகுதியான டிக்ரியில் விவசாயிகள் வருகையை தடுக்க காவல் துறையினர் தடுப்புகளை வைத்துள்ளனர்.
இதற்கிடையே டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் நகர எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார். பின்னர் திரும்பிச்செல்வதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார். பஞ்சாப்பிலும் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தியிருந்தது.
இதையும் படிக்க: `இறைச்சிக்காக பசுக்களை கடத்திய 5 பேரை இதுவரை கொலை செய்துள்ளோம்’- பாஜக மூத்த தலைவர் பேச்சுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM