குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள மீன்பிடி மற்றும் தோட்டத் துறை மக்ககளுக்கு நேரடி பண மானியம் வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (21) மண்ணெண்ணெய் விலையை அதிகரித்ததன் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை ரூ. 340 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல வருடங்களாக மண்ணெண்ணெய் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாத நிலையில், மண்ணெண்ணெய் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது எனவும், பெற்றோலியப் உற்பத்திகளை மானிய விலையில் விற்பனை செய்வதே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்திற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகவும் எனவும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
‘செலவுகளுக்கு இணையான விலைகளுடன், மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் தோட்டத் துறைகளுக்கு நேரடி பண மானியத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது என அமைச்சர் அமைச்சர் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .