இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் வரை மீம்ஸ் பார்க்க நேரம் செலவிட்டு வருவதாக RedSeer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை ஆய்வறிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளது அந்நிறுவனம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் 80 சதவீதம் மீம்ஸ் பார்க்கும் வழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பயனர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மீம்ஸ் பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு துறையில் மீம்ஸ்கள் உச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இந்த டிமாண்ட் காரணமாக மீம்ஸ்களை உருவாக்க உதவும் தளங்களின் எண்ணிக்கையும் சந்தையில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீம்ஸ் பயனர்கள் அல்லது பார்வையாளர்களில் பெருவாரியானவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோஷியல் மீடியாதான் மீம்ஸ்களை பார்வையிடுவதற்கு உதவும் பிரதான தளமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வாய்மொழியாக குறிப்பிட்டு சொல்வதும் மீம்ஸ்களுக்கான பார்வையைக் கூட்டுகிறதாம்.
இவை அனைத்திற்கும் சோஷியல் மீடியா தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு என ஒரு பிராண்ட் ஐடென்டியை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.