யமஹா மோட்டார் இந்தியா “தி கால் ஆஃப் தி ப்ளூ” பிராண்ட் பிரசாரத்தின் ஒரு அங்கமாக ‘சென்னை டே’ கொண்டாடும் வகையில் ‘சேவ் தி ப்ளூ ஓஷன்’ ரைடை நடத்தியது. தமிழ்நாடு அரசு, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) மற்றும் பூமி – அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
‘சேவ் தி ப்ளூ ஓஷன்’ ரைடு பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்யும் செயலாகும். சென்னையில் உள்ள யமஹா ‘ப்ளூ ஸ்ட்ரீக்ஸ்’ ரைடர்ஸ் கம்யூனிட்டியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், இந்த உன்னதமான நோக்கத்திற்காக முன்வந்தனர். விழாவில் ஒரு பகுதியாக, ஒரு பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் YMIG இன் தலைவர் திரு. ஈஷின் சிஹானா மற்றும் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) தெற்கு மண்டல துணை ஆணையர் திருமதி. சினேகா D, GCC பணியாளருக்கு நன்றி கூறினார்.
யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு. ஈஷின் சிஹானா (Eishin Chihana, Chairman, Yamaha Motor India Group) பேசுகையில், “தூய்மையான தேசம் மற்றும் நிலையான சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கும் எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, கடற்கரையை சுத்தம் செய்யும் முயற்சியை நாங்கள் ஏற்பாடு செய்ததில் பெருமிதம் கொள்கிறோம். தமிழ்நாடு மாநில அரசு மற்றும் கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆதரவுடன், இந்தச் செயல்பாட்டின் மூலம், மாசு இல்லாத சுற்றுப்புறங்களை உருவாக்குவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இது இறுதியில் எங்களைப் பின்தொடரும் இளம் தலைமுறையினருக்கு பயனளிக்கும். எங்கள் ப்ளூ ஸ்ட்ரீக்ஸ் ரைடர்ஸ் கம்யூனிட்டி மூலம் தி கால் ஆஃப் தி ப்ளூ பிராண்ட் பிரசாரத்தின் கீழ் இதேபோன்ற முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் மற்றும் நிறுவனத்தின் பார்வைக்கு ஏற்ப சுத்தமான மற்றும் பசுமையான சூழலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
யமஹா வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயல்பாடுகள் மற்றும் கேம்களை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து யமஹா ரைடர்களுக்கு நன்றி செய்தியும் வந்தது. எதிர்கால சந்ததியினருக்கு நிலையான சூழலை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வை பரப்பும் நோக்கில், இந்தியா முழுவதும் இதேபோன்ற சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்று கூறினார்.