தெற்கு லண்டனில் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதுடன், 7 பேர் கைது
பாடசாலை விடுமுறை மற்றும் வெப்ப அலை காரணமாகவே லண்டனில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
தெற்கு லண்டனில் நேற்றிரவு நடந்த பயங்கர சண்டையின் போது நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிக்ஸ்டனில் உள்ள ஜோசபின் அவென்யூ பகுதியில் சுமார் 6.20 மணியளவில் குழு ஒன்று கடும் மோதலில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் 30 வயது கடந்த நபர் கத்திக்குத்து காயங்களுடன் பொலிசார் மீட்டுள்ளனர்.
@mylondon
உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
இன்னொருவர் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட, அவரை கொலை முயற்சி வழக்கில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மெர்சிடிஸ் ஒன்று வெளியேற முயற்சிக்க, பொலிசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மூவர் கைதாகியுள்ளதுடன், ரத்த காயங்களுடன் காணப்பட்ட அவர்களை பொலிசார் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
@PA
அத்துடன், சம்பவப்பகுதியில் இருந்தே மேலும் மூவரை கொலை முயற்சி வழக்கில் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தெற்கு லண்டனில் நேற்று நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதுடன், 7 பேர் கைதாகியுள்ளனர்.
கடந்த வாரம் லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவிக்கையில், பாடசாலை விடுமுறை மற்றும் வெப்ப அலை காரணமாகவே லண்டனில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
@mylondon
மட்டுமின்றி படுகொலை சம்பவங்கல் தொடர்பிலும் தகவல் வெளியாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை உரிய நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும், வன்முறை சம்பவங்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.