லொட்டரியில் மிகப்பெரிய பரிசு! மகிழ்ச்சியில் துள்ளிய தமிழ்ப்பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை செய்தி


லொட்டரியில் பெரிய பரிசு விழுந்ததாக நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

அம்பலமாகியுள்ள ஓன்லைன் மோசடி சம்பவம்.

லொட்டரியில் பல லட்சங்கள் பரிசு விழுந்ததாக நினைத்து கனவில் மிதந்த பெண் மிகப்பெரிய அளவில் மோசடிக்கு ஆளாகியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த சந்தியா (24) என்ற இளம்பெண் தான் மோசடி நபரிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளார்.
எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், கடந்த மே மாதம் வீட்டில் இருந்து பணிபுரியும் விதமாக ஓன்லைனில் வேலை தேடினார்.

அப்போது வர்த்தக செயலி மூலம் வார சம்பளத்திற்கு வீட்டிலிருந்து சோப்பு பேக்கிங் செய்யும் வேலை பற்றிய விளம்பரத்தை கண்டுள்ளார். அந்த விளம்பரத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சந்தியா அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவே, வாட்ஸ்-அப் மூலம் பேசிய மர்ம நபர் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தினால் உங்களுக்கு வேலை உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

பணத்தை செலுத்தி முன்பதிவு செய்த சந்தியாவை 20 நாட்கள் கழித்து தொடர்பு கொண்ட அந்த நபர் உங்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் எங்கள் நிறுவனம் சார்பில் ரூ.60 லட்சம் லொட்டரி அடித்துள்ளதாகவும், அதை பெறுவதற்கு முன்பணமாக ரூ.7.5 லட்சம் வரி சலுகையாக செலுத்துமாறு கூறியுள்ளார்.

லொட்டரியில் மிகப்பெரிய பரிசு! மகிழ்ச்சியில் துள்ளிய தமிழ்ப்பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை செய்தி | Women Lottery Prize Cheated Money

இதை கேட்ட சந்தியா மகிழ்ச்சியில் துள்ளினார், எப்படியாவது லொட்டரி பரிசு பணத்தை பெற வேண்டும் என நினைத்து
தனது நகைகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் வாங்கியும் சுமார் ரூ.6 லட்சம் வரை பணத்தை அடையாளம் தெரியாத அந்த நபரின் வங்கி கணக்கில் தவணை முறையில் செலுத்தியுள்ளார்.

அதன் பின்னர் பரிசுத்தொகை குறித்து மர்ம நபரிடம் கேட்கவே, அவர் சரியாக பதில் அளிக்காமல் இணைப்பை துண்டித்துள்ளார். தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த சந்தியா சைபர் கிரைம் பொலிசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து மர்ம நபரின் செல்போன் நம்பரை வைத்து விசாரித்ததில் மோசடியில் ஈடுபட்ட நபர் சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கும் மதன்குமார் (32) என்று தெரிந்தது.

இதையடுத்து பொலிசார் மதன்குமாரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் மதன்குமார் போலியாக வர்த்தக ஓன்லைன் செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்குவதாக மோசடி செய்து சந்தியாவிடம் பணத்தை ஏமாற்றியது தெரிந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

லொட்டரியில் மிகப்பெரிய பரிசு! மகிழ்ச்சியில் துள்ளிய தமிழ்ப்பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை செய்தி | Women Lottery Prize Cheated Money

pipanews



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.