உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்றுதான். ஏனென்றால் உணவு அனைவருக்கும் பிடித்தமானது. அதில் கட்டுப்பாடு என்பது சற்று கடினமானது தான். உடல் எடையைக் குறைக்க டயட், உடற்பயிற்சி எனப் பல மேற்கொள்ளப்படுகிறது. ஆரோக்கியமான டயர் முறை பக்கவிளைவுகள் இல்லாததாகும். உடல் எடை குறைப்பில் முட்டை சிறந்ததாகவும், முதன்மையானதாகவும் உள்ளது.
காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது சிறந்தது. ஆனால் முட்டை சிறந்தது என்பதற்காக எண்ணெய், வெண்ணெய் போட்டு சமைக்க கூடாது. அது பலனில்லை. சுவையாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிடும் வகையில் சில முட்டை ரெசிபிகளை இங்கு பார்க்கலாம்.
முட்டை துருவல்
அடுப்பில் வைத்து சமைக்கிறோம் என்றால் கண்டிப்பாக எண்ணெய் சேர்ப்போம். ஆனால் இதில் எண்ணெய், வெண்ணெய், நெய் என எதுவும் சேர்க்காமல் செய்வது குறித்து பார்க்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர், 2 முட்டை மற்றும் 3 தேக்கரண்டி பால் சேர்த்து, முட்டைகள் கிரீமியாக வரும் வரை நன்றாக கலக்கவும். முட்டை வெந்தபிறகு, அடுப்பை அணைத்து, தேவையான அளவு உப்பு, மிளகு சேர்க்கவும். பின்னர் துருவல் முட்டைகளை காய்கறி சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.
எண்ணெய் இல்லாத ஆம்லெட்
பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி , தேவையான அளவு உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தோசை கல்லில் ஊற்றி எடுத்து சாப்பிடலாம். குறைந்த கலோரி கொண்ட ஆம்லெட் உடல் எடை குறைப்புக்கு பயன் அளிக்கும்.
கிரீமி முட்டை ரெசிபி
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சிறிது உப்பு, வினிகர் சேர்க்கவும். இப்போது முட்டையை உடைத்து ஊற்றவும். நன்கு கலக்கி கிரீம் போன்ற தன்மைக்கு கொண்டு வரவும். பின் அடுப்பை அணைத்து, மல்டிகிரேன் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வேகவைத்த முட்டை
முட்டை வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதை எளிமையாகவும் செய்துவிடலாம். ஆனால் இப்படி சாப்பிடுவது பலருக்கு பிடிக்காது. ஏனென்றால் சுவை இருக்காது. ஆதனால் முட்டையை வேகவைத்து இரண்டாக வெட்டி மிளகு, உப்பு போட்டு சாப்பிடுவது கொஞ்சம் சுவையாக இருக்கும். வேகவைத்த முட்டையில் அதிகம் புரதம், கலோரிகள் குறைவாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil