'வெயிலில் 30 நிமிடங்கள் படுத்திருந்தேன்' பிளாஸ்டிக் போல் மாறிய பிரித்தானிய பெண்ணின் முகம்!


பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண்ணின் முகம் பிளாஸ்டிக் போல் மாறியது.

அரை மணிநேரம் வெயிலில் படுத்திருந்த பிறகு தனது தோல் இப்படி ஆனதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவில், 30 நிமிடம் வெயிலில் உறங்கிய 25 வயது பெண்ணின் நெற்றியில் தோல் பிளாஸ்டிக் போன்று காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான சிரின் முராத் (Sirin Murad) பல்கேரியாவில் விடுமுறையில் இருந்தபோது, ​​21 டிகிரி செல்சியஸ் சூரிய ஒளியில் சன்ஸ்கிரீன் இல்லாமல் தூங்கியதாக கூறினார்.

அவர் நீச்சல்குளம் அருகே 30 நிமிடம் வெளியில் தூங்கி எழுந்தபோது அவரது முகம் சிவந்து காணப்பட்டது, சிறிது புண்ணானது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஓய்வெடுத்துள்ளார்.

அடுத்த நாள் அவரது தோல் மிகவும் இறுக்கமாக மாறியது, புருவங்களைச் சுருக்கும்போது அது பிளாஸ்டிக் போலத் தெரிந்துள்ளது.

தோல் பயங்கரமாக காயமானது பற்றி தனது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய பின்னர், மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார். ஏனெனில் அது இன்னும் மோசமாகிவிடும் என்று அவர் நினைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, முராத்தின் முகம் முழுவதும் உரிக்கத் தொடங்கியது.

தனது முகத்தின் தோல் புண்ணானபோது, முதலில் எதையும் உணரவில்லை, அழுத்தம் கொடுத்தபோது தான் சற்று வலித்தது என்று அவர் கூறினார்.

அடுத்த நாள் அது உண்மையில் வலித்தது, ஆனால் அது உரிக்கத் தொடங்கியபோது எனக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைத்தது. அது வலிக்கவில்லை, நான் நன்றாக உணர்ந்தேன். விசித்திரமாக, என் தோல் இப்போது நன்றாக இருக்கிறது. இது முன்பை விட, கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்டதைப் போல நன்றாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

வலிமிகுந்த இந்த அனுபவத்தைத் தொடர்ந்து, முராத் இப்போது சன்ஸ்கிரீனின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் ஆர்வமாக உள்ளார்.

“நீங்கள் நன்றாக இருப்பீர்கள் அல்லது உங்கள் சருமம் எரியாமல் இருக்கும் என்று நீங்கள் எவ்வளவு நினைத்தாலும், எப்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்!” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த மாதம் நடந்தது, இப்போது முராத்தின் கன்னங்களில் சில புள்ளிகள் மட்டும் நிறமாற்றத்துடன் காணப்படுகிறது.

இருப்பினும், இது அவருக்கு எதிர்பாராதவிதமாக மிகவும் மோசமாக இருந்திருக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான வெயிலால் மெலனோமாவின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது, இது மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோயாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.