முன்னாள் அமைச்சர் சிவபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி வரும் 28-ம் தேதி திருச்சி வருகின்றார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பொதுக்குழுவை கூட்டி பிரம்மாண்டம் காண்பித்ததற்கு பின், முதன்முறையாக இபிஎஸ் திருச்சிக்கு வருகிறார்.
இதனையடுத்து அவரை வரவேற்பது தொடர்பாக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பரஞ்சோதி, வளர்மதி, முன்னாள் எம்.பி.ரத்தினவேல், முன்னாள் ஆவின் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் மேயர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
திருச்சிக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு, சுப்பிரமணியபுரம் எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அதிமுகவினர் திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் அவரை வரவேற்க திருச்சியில் 2 இடங்களை தேர்வு செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையரிடமும் முறையாக அனுமதி கடிதம் கொடுத்திருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஒற்றைத் தலைமையின் பிரம்மாண்டத்தை நிரூபிக்கும் வகையில் வரவேற்பு கொடுக்க, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இப்போதிலிருந்தே திட்டமிடல் பணியை தொடங்கி இருக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“