அதிதி ஷங்கரின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்க் எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகிற்கு புது வரவாக வந்திருக்கும் அதிதி ஷங்கர் பல திறமைகளை கைவசம் வைத்திருப்பதாக அவரை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.  பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் இவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாதிலிருந்தே இவரது நடிப்பு எப்படி இருக்கும் என்று பலரும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.  பிரபலத்தின் வாரிசு என்பதால் நடிக்கும் முதல் படத்திலேயே கொஞ்சம் மாடர்னாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் நேரெதிராக பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார்.  முத்தையா இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள விருமன் படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.  இவரது கலகலப்பான பேச்சு, எவ்வித தயக்கமுமின்றி உற்சாகமாக ஆடுவது, பாடுவது என்று துறுதுறுப்பாக இருப்பதால் இவரை பலருக்கும் பிடித்துப்போய்விட்டது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே ‘விருமன்‘ படத்தில் இவர் பாடிய ‘மதுர வீரன்’ பாடல் தான் முதலில் வந்து நிற்கிறது.  இதற்கு முன்னர் இவர் தெலுங்கில் ஒரு படத்தில் பாடல் பாடியுள்ளார், அடுத்ததாக தான் விருமன் படத்தில் இவர் பாடியிருக்கிறார்.  விருமன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இவரது துடிப்பான செயல்கள், நகைச்சுவையான பேச்சுக்கள் பலரையும் கவர்ந்தது.  சிலர் இவரை க்ரிஞ்ச் மெட்டிரியலாக கருதினாலும் பலர் இவரை க்ரஷ் மெட்டிரியலாக கருதுகின்றனர்.  பொதுவாக திரை பிரபலங்கள் அல்லது சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருந்தாலோ அல்லது சினிமாவிற்கு புது வரவாக யாரேனும் வந்தாலோ அவர்களது தனிப்பட்ட தகவல்கள் பற்றிய தேடுதல்களை நாம் தேட தொடங்கிவிடுவோம்.  

அப்படி இப்போது பிரபலமாக இருக்கும் அதிதி ஷங்கரை பற்றிய விஷயங்களை பலர் தேடி வருகின்றனர், அதில் அவரது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  பல திறமை வாய்ந்த இவர் அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண், கணித பாடத்தில் 97 மதிப்பெண்கள் , பிரெஞ்சு பாடத்தில் 97 மதிப்பெண்கள், சமூக அறிவியலில் 91 மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 91 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.  மேலும் அதிதி மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்றிருக்கிறார், ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தால் தற்போது சினிமா பக்கம் வந்துள்ளார்.

Aditi

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.