அமெரிக்க அரசு திடீர் முடிவு.. ஐடி ஊழியர்கள் உச்சகட்ட சோகம்..!

அமெரிக்க அரசு 2023 நிதியாண்டில் (செப்டம்பர் 30, 2023 இல் முடிவடையும் ஆண்டு) H-1B விசாக்களுக்கான இரண்டாவது லாட்டரி தேர்வை நடத்தாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கக் கனவுடன் இருக்கும் பல கோடி மக்களுக்கு இது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. குறிப்பாக ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் அமெரிக்காவுக்கு ஆன்சைட் ஆஃபர் வாங்கிக்கொண்டு காத்திருக்கும் பலருக்கு இது உண்மையிலேயே பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

அமெரிக்க அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது..?

அமெரிக்கா விசா வாங்க 2024 வரை காத்திருக்க வேண்டும்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவின் குடிவரவு வழக்கறிஞர்கள் H-1B விசா வழங்குவதில் பல ‘non-selection’ நோட்டீஸ் வெளியிட்டு உள்ளதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் இது இரண்டாவது லாட்டரி தேர்வு நடத்தப்படாது என்பதற்கான அறிகுறி எனக் கூறியுள்ளதாக டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளனர்.

 non-selection நோட்டீஸ்

non-selection நோட்டீஸ்

இந்த ஆண்டு இரண்டாவது H-1B லாட்டரி கிடைக்காமல் போகலாம். USCIS பல non-selection அறிவிப்புகளை மின்னணு முறையில் வெளியிட்டுள்ளது, இது லாட்டரிகள் தேர்வுகள் இல்லாதபோது மட்டுமே எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்று Immigration.com இன் நிர்வாக வழக்கறிஞர் ராஜீவ் கன்னா கூறினார்.

2வது லாட்டரி
 

2வது லாட்டரி

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பான USCIS இலிருந்து இன்னும் முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனாலும் அதிகளவில் வெளியிடப்பட்டு உள்ள non-selection அறிவிப்புகள் வைத்துத் தற்போது 2வது லாட்டரி தேர்வுகள் இருக்காது எனக் கூறப்படுகிறது.

483,927 H-1B விண்ணப்பங்கள்

483,927 H-1B விண்ணப்பங்கள்

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இந்த நிதியாண்டில் 483,927 H-1B விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 57% அதிகமாகும். இவற்றில், USCIS 127,600 விண்ணப்பங்களை (26%) H-1B ஒதுக்கீட்டை முழுமையாகத் தீர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.

விசா எண்ணிக்கை

விசா எண்ணிக்கை

சமீபத்தில் அமெரிக்காவிற்கு விசிட்டர் விசா வாங்குவதில் பெரிய அளவிலான தாமதம் உள்ளது, அமெரிக்கச் செல்ல காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. மேலும் 2வது லாட்டரி ரத்து செய்யப்படுவது என்பது முதல் லாட்டரி தேர்விலேயே இந்த வருடத்திற்கான கோட்டாவை நிரப்ப போதுமான விண்ணப்பங்களைத் தேர்வு செய்துள்ளதைக் காட்டுகிறது. இதனால் 2வது லாட்டரி தேவைப்படவில்லை என்பதே பொருள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

USA may not conduct a second H-1B visa lottery for FY23

USA may not conduct a second H-1B visa lottery for FY23 அமெரிக்க அரசு திடீர் முடிவு.. ஐடி ஊழியர்கள் உச்சகட்ட சோகம்..!

Story first published: Tuesday, August 23, 2022, 17:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.