அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு குற்றச்சாட்டுகள் வைக்க சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல அரசியல் விமர்சனராக சவுக்கு சங்கர் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி அதிமுகவில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், தற்போது திமுகவில் மின்சாரத்துறை அமைச்சராகவும் பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இது தொடர்பாக வீடியோ பதிவுகளை வெளியிட்ட சவுக்கு சங்கர், அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்த அவர், இந்த மோசடி சம்பவங்களுக்காக அவர் விரைவில் சிறை செல்வார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களாக இந்த குற்றச்சாட்டுகள் வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிரான நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, என் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்துவமை தடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வெளியிட்ட இது தொடர்பான வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் இந்த குற்றச்சாட்டுகள் மூலம் சவுக்கு சங்கர் தனது பெயருக்கு கலங்கம் விளைவித்துவிட்டார் என்றும். இதனால் அவர் தனக்கு நஷ்டஈடாக ரூ 2 கோடி தரவேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு குற்றச்சாட்டுகள் கூற சவுக்கு சங்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டு வீடியோ சமூக வலைதள பதிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“