சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 9 மணி நேர அறுவை சிகிச்சையில் 10 பேர் கொண்ட மருத்துவ வல்லுனர் குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். ஆவடி அருகே அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. ஆவடியை அடுத்த வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-செளபாக்யா தம்பதியின் மூத்த மகள் டானியா (9). இவர் முகச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர், அவரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்தும் பாதிப்பு குறையவில்லை. இதனையடுத்து பல மருத்துவமணையில் டானியா-வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல டானியாவின் முகம், வலது கண், கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதையத் தொடங்கியது.
இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தொடங்கப்பட்டது.இந்தநிலையில், பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது டானியா-வுக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. 9 மணி நேர அறுவை சிகிச்சையில் 10 பேர் கொண்ட மருத்துவ வல்லுனர் குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
நான் எத்தனையோ கடவுளை வேண்டி இருக்கிறேன் எந்த கடவுளும் எதுவும் செய்யவில்லை எனக்கு முதல்வர் ஸ்டாலின் தன கடவுள் என்று உணர்ச்சி பொங்க சிறுமியின் தந்தை கூறியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையினால் சிறுமியின் கன்னம் சீரடைந்து தன்னம்பிக்கை ஏற்பட்டு மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர வேண்டும் என்பது தான் பொதுமக்களின் ஆசையாக உள்ளது என்று சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.