ஆகஸ்ட் 30 இல் கூடும் தமிழக அமைச்சரவை… என்ன விஷயம்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இன்று கோவை சென்றுள்ளார். கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைக்க உள்ள அவர், 25 ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளார்.

முதல்வர் சென்னை திரும்பிய சில நாட்கள் இடைவெளியில் அவரது தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 30 ஆம் தேதி (ஆகஸ்ட் 30) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புதிய தொழில் கொள்கை, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, பரந்தூர் விமான நிலைய விவாகரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கூட்டத்தில், தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக தன்னிடம் உள்ள ரிப்போர்ட் கார்டை அவர்களிடம் காண்பித்து சில அறிவுரைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.