`இந்தியாவின் வானிலை பெண்’ அன்னா மணி 104-வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

இந்தியாவின் வானிலை பெண் அன்னா மணியின் 104வது பிறந்தநாளுக்காக அவரை கவுரவிக்கும் விதமாக சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வானிலை பெண்’ என்று அழைக்கப்படும் அன்னமணி, 23 ஆகஸ்ட் 1918 அன்று கேரளாவில் பிறந்து, வானிலை ஆய்வு மீது அதீத ஆர்வம் கொண்ட காரணத்தினால் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். 1948ல் அவர் இந்தியாவுக்குத் திரும்பி இந்திய வானிலை ஆய்வுத் துறையில் (IMD) பணியாற்றத் தொடங்கி வானிலை கருவிகளை வடிவமைத்து தயாரிக்க உதவினார்.
image
இப்படி இந்திய வானிலையின் முக்கிய நபராக விளங்கிய அண்ணா மணியின் 104வது பிறந்தநாளையொட்டி அவருக்கு கூகுள் நிறுவனம் மரியாதை செலுத்தியுள்ளது. கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் அண்ணா மணியின் வண்ணமயமான மற்றும் நேர்த்தியான படம் மூலம் அண்ணா மணியை கவுரவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.