இப்போக்கூட கேவலமா இருக்கேன் – கலந்துரையாடலில் விக்ரம் பேச்சு

அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா. இதில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், ஜான் விஜய், மிருணாளினி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான இசையமைத்திருக்கும் இப்படத்தை லலித் குமார் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் படமானது வெளியாகிறது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில் நடிகர் விக்ரம் இன்று கோப்ரா ப்ரோமோஷனுக்காக திருச்சி சென்றார். அப்போது திருச்சி ஜோசப் கல்லூரியில் நடந்த கோப்ரா திரைப்படத்தின் ப்ரோமோஷனில் அவர் கலந்துகொண்டார்.

அதன் பிறகு கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய விக்ரம், “திருச்சி என்றாலே எனக்கு சாமி படம் ஞாபகம்தான் வரும். சின்ன வயதில் ஸ்போர்ட்ஸில் கலந்துகொள்ள இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் ஒரு அறிவியலும், எமோஷனலும் கலந்த படம். ஒரு வாரத்தில் படம் வெளியாக உள்ளதுமிகவும் சந்தோஷமாக உள்ளது. 

 

இந்தப் படத்தில் நடித்துள்ள கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு கல்லூரி மாணவி கதாபாத்திரம். நான் கல்லூரிக்கே போகவில்லை. என் அப்பா ஐஏஎஸ் படிக்க சொன்னார். இந்த கல்லூரி முதல்வர்தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார். சினிமா என்றால் எனக்கு பைத்தியம். இப்போதுகூட கேவலமாக தாடியோடு இருக்கேன். இதை என்னுடைய அடுத்த படத்திற்காக வளர்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.