உருளைக்கிழங்கு சிப்ஸ் ஏற்றுமதியில் குஜராத்: மோடி முதல்வராக இருந்தபோது செய்த சாதனை!

உருளைக்கிழங்கு என்பது இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் உருளைக்கிழங்கு இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக மட்டுமின்றி இந்தியர்களின் முக்கிய ஏற்றுமதி பொருளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ் குஜராத்திலிருந்து மிக அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் அதற்கு முக்கிய காரணம் இன்றைய பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருக்கும்போது செய்த கட்டமைப்புதான் என்பது குறிப்பிடதக்கது.

சென்செக்ஸ்: 2 மாதத்தில் மோசமான சரிவு.. முதலீட்டாளர்களே உஷார்..!

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு என்பது கடந்த பல ஆண்டுகளாக இந்தியர்களின் வழக்கமான உணவுப்பொருட்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு 6 ஆயிரம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை இறக்குமதி செய்த இந்தியா, 2019 ஆம் ஆண்டில் சுமார் 30,000 டன் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து உள்ளது

குஜராத்

குஜராத்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பெரும்பாலும் குஜராத் மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மொத்த உருளைக்கிழங்கு உற்பத்தியில் குஜராத் 7.72% மட்டுமே அறுவடை செய்கிறது. ஆனால் ஏற்றுமதியில் இந்த மாநிலம் எப்படி இந்த அளவுக்கு உயர்ந்தது என்பதற்கு ஒரே காரணம் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது செய்த சாதனை தான் என்று கூறப்படுகிறது

நரேந்திர மோடி
 

நரேந்திர மோடி

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது மூன்று பெரிய உருளைக்கிழங்கு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தார். மெக்கெய்ன் ஃபுட்ஸ், இஸ்கான் பாலாஜி ஃபுட்ஸ் மற்றும் ஹைஃபன் ஃபுட்ஸ் ஆகிய இந்த மூன்று உணவு தொழிற்சாலை தான் இன்றைய உருளைக்கிழங்கு ஏற்றுமதியில் சாதனை செய்து வருகிறது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இதுகுறித்து ஹைபன் ஃபுட்ஸ் சி.இ.ஓ ஹரேஷ் கரம்சந்தனி அவர்கள் கூறியபோது, ‘இந்தியா 2015ஆம் ஆண்டில் பிரஞ்ச் ஃபிரை என்று கூறப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. ஆண்டுக்கு 5,000 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் திறனை மெக்கெய்ன் ஃபுட்ஸ், இஸ்கான் பாலாஜி ஃபுட்ஸ் மற்றும் ஹைஃபன் ஃபுட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து உறைந்த உருளைக்கிழங்கு தயாரிப்பு ஏற்றுமதியில் குஜராத் முக்கிய பங்கு வகிக்கின்றது’ என்று கூறியுள்ளார்.

$1.10 பில்லியன் சந்தை மதிப்பு

$1.10 பில்லியன் சந்தை மதிப்பு

இந்தியாவின் உறைந்த நிலையிலான உருளைக்கிழங்கு தயாரிப்புகள் 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட $1.10 பில்லியன் சந்தை மதிப்பை எட்டியதாகவும், இந்த சந்தையானது 2022-27 ஆம் ஆண்டிற்குள் 17 சதவிகிதம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Did You Know That Gujarat Is India’s Biggest Exporter Of French Fries?

Did You Know That Gujarat Is India’s Biggest Exporter Of French Fries? | உருளைக்கிழங்கு சிப்ஸ் ஏற்றுமதியில் குஜராத்: மோடி முதல்வராக இருந்தபோது செய்த சாதனை!

Story first published: Tuesday, August 23, 2022, 11:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.