எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!

இந்திய பங்கு சந்தையில் சமீபத்திய ஆண்டுகளாகவே நல்ல ஏற்றம் கண்டு வரும் பங்குகளில், கெமிக்கல் பங்குகளும் ஒன்று. பல கெமிக்கல் பங்குகளும் மல்டி பேக்கர் பங்குகளாக உள்ளதை முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம் .

குறிப்பாக சீனா அதன் உற்பத்தியினை குறைக்க தொடங்கியுள்ள நிலையில், அது இந்திய உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளாக பார்க்கப்படுகின்றன.

மேலும் ஆண்டுக்கு ஆண்டு சர்வதேச அளவில் தேவையானது வலுவான மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், அது இந்திய உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

FMCG நிறுவனத்தின் இந்த பங்கு உங்களிடம் இருக்கா.. விரைவில் சர்பிரைஸ் காத்திருக்கு!

என்னென்ன நிறுவனங்கள்?

என்னென்ன நிறுவனங்கள்?

இது கெமிக்கல் நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனம் வினாதி ஆர்கானிக்ஸ், NOCIL மற்றும் கேலக்ஸி சர்பாக்டான்ட்கள் உள்ளிட்ட பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

வினாதி ஆர்கானிக்ஸ்

வினாதி ஆர்கானிக்ஸ்

வினாதி ஆர்கானிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீரல் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதன் உற்பத்தியினை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. இது அதன் வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. இதன் காரணமாக இதன் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என்ரும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்கு விலையாக 2680 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது. இது முன்னணி சிறப்பு கெமிக்கல் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

NOCIL
 

NOCIL

NOCIL முன்னணி டயர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதன் கேபேக்ஸ்-ஐ 200 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் தான் தான் தரகு நிறுவனம் வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையானது 319 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

கேலக்ஸி சர்பாக்டான்ட்கள்

கேலக்ஸி சர்பாக்டான்ட்கள்

கேலக்ஸி சர்பாக்டான்ட்கள் சிறப்பு கெமிக்கல் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது தொடர்ந்து அதன் பட்டியலில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றது. குறிப்பாக சிறப்பு கெமிக்கல்களில் கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இப்பங்கின் வளர்ச்சி அதிகரிக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. இதன் இலக்கு விலையை 4000 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

3 specialty chemical stocks may rise in future:What is the target price?

3 specialty chemical stocks may rise in future:What is the target price?/எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!

Story first published: Tuesday, August 23, 2022, 19:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.