டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பர்சனல் வாழ்க்கையைப் பார்த்தால் மிகவும் கலர்புள் ஆக உள்ளது. பல திருமணங்கள், பல காதலிகள், பலருடன் லிவ் டுகெதர் என வாழ்ந்துள்ள எலான் மஸ்க் தற்போது 51 வயதில் சிங்கிள் ஆக உள்ளார்.
இந்த நிலையில் எலான் மஸ்க்-ன் கல்லூரி காதலியான ஜெனிபர் க்வின் (Jennifer Gwynne) எலான் மஸ்க் உடனான தனது புகைப்படங்களை ஏலம் விட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மஸ்க் 20 வயது கல்லூரி மாணவன் பென்சில்வேனியா பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் அரிய புகைப்படங்கள்.
எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!
எலான் மஸ்க்
எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு பல ஏற்ற இறக்கங்கள் எதிர்கொண்டாலும் அவரது புகழ் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. வயதானவர்கள் முதல் இளம் தலைமுறையினர் வரையில் எலான் மஸ்க்-ன் பேன் ஆக உள்ளனர் என்றால் மிகையில்லை.
கனடா
எலான் மஸ்க் தனது தாயுடன் தென்னாப்பிரிக்காவில் இருந்து கனடா-வுக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டு குடியுரிமை பெற்ற பின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் கல்வியை முடிந்து அதன் பின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் இயற்பியலில் இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
1995 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர கலிபோர்னியாவுக்குச் சென்றார், ஆனால் கல்லூரியைப் பாதியிலேயே விட்டு பிஸ்னஸ் செய்ய முடிவு செய்தார். இதில் எலான் மஸ்க் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த போது ஜெனிபர் க்வின் (Jennifer Gwynne) என்பவர் மீது காதல் வயப்பட்டார்.
ஜெனிபர் க்வின்
தற்போது ஜெனிபர் க்வின் தென் கரோலினாவில் தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வருகிறார், இருவரும் காதலித்த வேளையில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை RR அக்ஷன் மூலம் தனது வளர்ப்பு மகனின் கல்விக் கட்டணத்திற்குப் பணம் திரட்டுவதற்காக விற்பனை செய்கிறார்.
23 வயதான எலான் மஸ்க்
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் 23 வயதான மஸ்க்-கின் படத்தைப் பகிர்ந்து க்வின், “எலான் யாரிடமும் பேசாமல் மிகவும் ரிசர்வாக இருப்பார், ஆனால் எப்போதாவது அவர் மிகவும் சில்லியா நடந்து கொண்டு என்ன சிரிப்பு மூட்டுவார் என தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
ரொமேன்ஸ்
ஜெனிபர் க்வின் மற்றும் எலான் மஸ்க் 1994-95 ஆண்டின் FALL செமஸ்டரின் போது டேட்டிங் செய்தனர், இப்போது இருவரும் Spruce Street-ன் Resident Advisors ஆக பணியாற்றியுள்ளனர். இருவரிடமும் ரொமேன்ஸ் இருந்தது ஆனால் நெருக்கம் இல்லை என ஜெனிபர் க்வின் கூறினார்.
Elon Musk’s ex college girlfriend Jennifer Gwynne auctions old photos
Elon Musk’s ex college girlfriend Jennifer Gwynne auctions old photos எலான் மஸ்க் கல்லூரி காதலி ஜெனிபர்.. ஏலம் விடப்பட்ட ஸ்பெஷல் போட்டோ..!