கானாவில் நபர் ஒருவர் கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்தவர் கோஃபி அட்டா(47). உழவு தொழில் செய்து வரும் இவருக்கு தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவு வந்துள்ளது.
அதில் அவர் கத்தியை கையில் எடுத்து ஆடு ஒன்றை வெட்டுவது போல் இருந்துள்ளது. ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு.
கனவில் ஆடு வெட்டுவது போல் நினைத்த அவர், உண்மையில் தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார். தனக்கு வலி இருப்பதை உணர்ந்தபோது தான் அவருக்கு விழிப்பு வந்துள்ளது.
PC: FREEPIK
இதனால் அலறித் துடித்த கோஃபி அட்டாவை அவரது மனைவி, உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவருக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், ஆறு வாரங்களுக்கு பிறகு அவரது ஆணுறுப்பை மீண்டும் இணைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தனது கைக்கு கத்தி எப்படி வந்தது என்றும், எப்படி இவ்வாறு செய்தேன் என்றும் தெரியவில்லை என்றும் கோஃபி கூறியுள்ளார்.