கபாலிக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள்.. ரொம்ப மன உளைச்சலை கொடுத்துச்சு.. போட்டு உடைத்த பா. ரஞ்சித்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கபாலி படம் பற்றி அவர் பேசியது டிரெண்டாகி வருகிறது.

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை இயக்கி இருந்தார் பா. ரஞ்சித்.

அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததாகவும் அதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பா. ரஞ்சித் பேசி உள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

வெங்கட் பிரபு இல்லைன்னா

இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் பா. ரஞ்சித். சென்னை 28 படம் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இல்லைன்னா தான் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்றும், அதனால், தான் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைத்தேன் என்றும் பேசினார் பா. ரஞ்சித்.

இயக்குநர் சசியிடம் இதை கத்துக்கிட்டேன்

இயக்குநர் சசியிடம் இதை கத்துக்கிட்டேன்

கல்லூரி மாணவனாக இருந்த போதே பல இயக்குநர்களை சந்திக்க முயற்சி செய்துள்ளேன். ஆனால், அவர்கள் அலுவலக கேட்டுக்குள் கூட என்னால் போக முடியாத நிலை இருந்தது. ஆனால், அப்பவே இயக்குநர் சசி சார் என்னை உள்ளே அழைத்து உட்கார வைத்து பேசினார். நானும் என்னைத் தேடி வருபவர்களை அப்படி நடத்தவும் என் உதவி இயக்குநர்களுக்கு மரியாதை கொடுத்து நடத்தவும் அவரது செயல் தான் எனக்கு பாடமாக அமைந்தது என்றார்.

நீலம் தயாரிப்பில்

நீலம் தயாரிப்பில்

இயக்குநர் வெற்றிமாறனிடம் இருந்து ஸ்ட்ராங் மெசேஜ் படங்களை எடுத்தும் ஜெயிக்க முடியும் என்பதை கற்றுக் கொண்டேன். எனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் கமர்ஷியலை தாண்டி சமூகத்தில் சொல்ல முடியாத ஆனால், சொல்ல வேண்டிய கருத்துக்களை படமாக உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பில் தான் அதை நடத்தி வருகிறேன் என்று பேசினார்.

கபாலியால் மன உளைச்சல்

கபாலியால் மன உளைச்சல்

கபாலி படம் ரிலீசான பின்னர் அந்த படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. இண்டஸ்ட்ரியில் இருக்கிறவங்க யாருமே அந்த படத்தை பாராட்டவில்லை. ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு என்னிடம் ஒரு லிஸ்ட் எடுத்துக் கொண்டு ஓடி வந்தார். படம் பெரிய ஹிட், எவ்வளவு வசூல் எங்கெல்லாம் எப்படி கலெக்ட் பண்ணியிருக்கு பாரு, எதை பத்தியும் நீ கவலைப்படாதன்னு சொன்னார். அப்படியொரு தயாரிப்பாளரை நான் பார்த்ததே கிடையாது என பா. ரஞ்சித் பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ரஜினி தந்த இன்னொரு வாய்ப்பு

ரஜினி தந்த இன்னொரு வாய்ப்பு

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தை பார்த்து பிடித்துப் போன நிலையில், தான் ரஜினிகாந்த் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதன் கிளைமேக்ஸ் தாணுவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், இயக்குநரை டிஸ்டர்ப் பண்ணாமல் அவர் இஷ்டத்துக்கு விட்டுள்ளார். கபாலி படத்திற்கு குவிந்த வசூல் காரணமாக மீண்டும் பா. ரஞ்சித் உடன் காலா படத்தில் இணைந்து நடித்தார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளம்பிய சர்ச்சைகள்

கிளம்பிய சர்ச்சைகள்

சார்பட்டா பரம்பரை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன், கலையரசன் நடிப்பில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தில், தாலி பற்றிய கருத்து மற்றும் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் காதலிக்கக் கூடாதா போன்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த படத்துக்கு எதிரான சர்ச்சைகளும் கிளம்பி உள்ளன. நட்சத்திரம் நகர்கிறது வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.