காங்கிரஸ்
தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்காவிட்டால் தொண்டர்கள் வருத்தம் அடைவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெய்லாட் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட ஆர்வம் காட்டாத நிலையில், அஷோக் கெய்லாட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பின்பு காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்தார். சோனியா காந்திக்கு உடல் நிலை சரி இல்லாத நிலையில் அவரால் காங்கிரஸ் தலைவாராக தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட ராகுல் காந்தி ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெய்லாட் “ காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ஏற்காவிட்டால் தொண்டர்கள் வருத்தம் அடைவார்கள்” என கூறியுள்ளார்,
வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தல் உற்று நோக்கப்படுகிறது. காங்கிரஸ் தொண்டர்களும் ராகுல் காந்தி தலைவராக வர வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள். அவர் இல்லாவிட்டால் பிரியங்கா காந்தியை எதிர்பார்க்கின்றர்கள். ஆனால் ராகுல் காந்தியோ நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த விரும்புவதாக தெரிகிறது.
இந்நிலையில் வருகின்ற செப்டம்பர்7ம் தேதி ராகுல் காந்தி இந்திய அளவில் தனது நடை பயணத்தை துவங்க உள்ளார். இதுவும் அரசியல் வட்டாரத்தில் பெரிதும் கவனிக்கப்படுகிறது.