சென்னை : அட்லியின் ஜவான் படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பையில் இருந்து 400 கலைஞர்கள் சென்னை வந்துள்ளனர்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக இந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வருகிறார்.
இதற்கான படப்பிடிப்பு கோவா, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதியாக மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில், நாயகி கதாபாத்திரம் நயன்தாரா நடித்து வருகிறார்.
ஜவான்
நல்ல கதை மற்றும் நேர்த்தியான திரைக்கதை தான் வெற்றிக்கு முக்கியம் என நினைத்த ஷாருக்கான் இயக்குநர் அட்லியிடம் கதை கேட்டு அட்லியின் படத்திற்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
ஜூன் 2-ம் தேதி ரிலீஸ்
இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரியாமணி, யோகிபாபு, உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதிக்கு வில்லன்
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ள இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் ராணாவிடம் பேச்சுவார்த்த நடத்தப்பட்ட நிலையில் அவர் மறுத்துவிட்டதை அடுத்து, ஜவான்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இணைந்த பாலிவுட் நடிகை
ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோனே, ஷாருக்கான் கலந்து கொண்ட நிலையில், படப்பிடிப்புக்காக சுமார் 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லி முதல் முதலில் பாலிவுட் படத்தை இயக்கி வருவதால், மும்பை கலைஞர்களை இதில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.