திருச்சியில் ரசிகர்கள் மீது தடியடி.. சியான் விக்ரம் அதுக்கு என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!

திருச்சி:
கோப்ரா
படத்தின்
புரமோஷனை
முன்னிட்டு
திருச்சியில்
உள்ள
தனியார்
கல்லூரிக்கு
நடிகர்
விக்ரம்,
ஸ்ரீநிதி
ஷெட்டி
மற்றும்
மிருனாளினி
ரவி
உள்ளிட்டோர்
சென்றனர்.

திருச்சி
விமான
நிலையத்திலேயே
சியான்
விக்ரமை
காண
ஏகப்பட்ட
ரசிகர்கள்
திரண்டதால்
பெரும்
பரபரப்பு
ஏற்பட்டது.

கூட்டத்தை
கலைக்க
போலீசார்
லேசான
தடியடி
நடத்தினர்.
இந்நிலையில்,
அது
தொடர்பாக
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
பதில்
அளித்துள்ளார்
சியான்
விக்ரம்.

கோப்ரா
வருது

இயக்குநர்
அஜய்
ஞானமுத்து
இயக்கத்தில்
சியான்
விக்ரம்,
இர்ஃபான்
பதான்,
ஸ்ரீநிதி
ஷெட்டி
மற்றும்
மிருணாளினி
ரவி
நடிப்பில்
உருவாகி
உள்ள
கோப்ரா
படம்
வரும்
ஆகஸ்ட்
31ம்
தேதி
திரைக்கு
வருகிறது.
பல
ரிலீஸ்
தேதிகள்
மாற்றப்பட்ட
நிலையில்,
கடைசியாக
இந்த
தேதி
கன்ஃபார்ம்
ஆகி
உள்ளது.
ஆகஸ்ட்
11ம்
தேதியே
வெளியாக
வேண்டிய
கோப்ரா
படம்
கடைசியாக
லால்
சிங்
சத்தா
படத்துக்காகவும்
ரிலீஸ்
தேதி
மாற்றப்பட்டது
ரசிகர்களை
வருத்தமடைய
செய்தது.

ஊர் ஊரா புரமோஷன்

ஊர்
ஊரா
புரமோஷன்

கோப்ரா
படத்தின்
புரமோஷனை
சியான்
விக்ரம்
பரபரப்பாக
நடத்தி
வருகிறார்.
காலையில்
திருச்சி,
மாலையில்
மதுரை
என
அனல்
பறக்கும்
புரமோஷன்
பணிகளை
மேற்கொண்டு
வருகிறார்.
திருச்சியில்
உள்ள
தனியார்
கல்லூரியில்
மாணவர்களை
சந்தித்து
அவருடன்
கலந்துரையாடினார்
விக்ரம்.

நன்றி சொன்ன விக்ரம்

நன்றி
சொன்ன
விக்ரம்

“இன்று
கோப்ரா
திரைப்பட
முன்னோட்ட
நிகழ்விற்கு
திருச்சி
வந்த
என்னை,
வார்த்தைகளால்
விவரிக்க
இயலா
வண்ணம்
அன்பு
மழையில்
நனைய
வைத்த
என்
ரசிகர்களுக்கு
என்றும்
அன்புக்கு
உரித்தானவனாய்
என்
இதயம்
கனிந்த
நன்றிகள்.”
என
தற்போது
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் மீது தடியடி

ரசிகர்கள்
மீது
தடியடி

சியான்
விக்ரம்
வரும்
தகவலை
அதிகாரப்பூர்வமாக
தயாரிப்பு
நிறுவனமான
செவந்த்
ஸ்க்ரீன்
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
பதிவிட்ட
நிலையில்,
திருச்சி
விமான
நிலையத்திலேயே
சியான்
விக்ரமை
காண
ஏகப்பட்ட
ரசிகர்கள்
குவிந்து
விட்ட்னார்.
அதனால்,
கூட்டத்தை
கட்டுக்குள்
கொண்டு
வர
போலீசார்
லேசான
தடியடி
நடத்தியது
பெரும்
சர்ச்சையை
கிளப்பியது.

வருந்திய விக்ரம்

வருந்திய
விக்ரம்

இந்நிலையில்,
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
ரசிகர்களுக்கு
நன்றி
கூறியது
மட்டுமின்றி
இன்னொரு
ட்வீட்டையும்
விக்ரம்
பதிவிட்டுள்ளார்.
“அதே
வேளையில்
சில
விரும்பதகா
சூழல்
ஏற்பட்டதாக
என்
கவனத்திற்கு
வந்துள்ளது,
அத்தகைய
நிகழ்விற்கும்,
அசௌகர்யத்திற்க்கும்
என்
வருத்தத்தை
பதிவு
செய்து
கொள்கிறேன்.
இங்கு
இவரை
யான்
பெறவே
என்ன
தவம்
செய்து
விட்டேன்.”
என
நடிகர்
விக்ரம்
தனது
ரசிகர்களிடத்தில்
மன்னிப்பு
கேட்டு
வருந்தியது
ரசிகர்களை
உணர்ச்சிவசப்பட
வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.