நாட்டில் எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


நாட்டில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் என்றும் பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை புறக்கணிக்கப்பட்டுள்ளதால், இந்த பயங்கரமான வைரஸ் அடிமட்டத்தில் இருந்து கட்டுப்பாடில்லாமல் பரவி வருகின்றது.

எந்த நேரத்தில் பேரழிவு நிலை உருவாகலாம்

நாட்டில் எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Covid Infection Is Spreading

தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் நோய் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

கிராமப்புறங்களில் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் கொவிட்தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இந்த கோவிட் நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கருத்திற்  கொள்ளவில்லை.

எனவே, கோவிட் -19 தொற்றுப் பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மற்றும் சமூகத்தில் அடிமட்ட மட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது.

நாட்டில் எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Covid Infection Is Spreading

பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எந்தவொரு சுகாதார வழிகாட்டல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிய கவனம் செலுத்தப்படாமல் பல சமூகக் கூட்டங்கள் இப்போது நடைபெறுகின்றன. கோவிட் வைரஸ் மீண்டும் பரவினால், இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தொழிற்சங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.