‘நானும் 4 வருடங்களாக தேடி கொண்டிருக்கின்றேன்.. பிர்லா கூறிய ஜோக்!

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லா அவர்கள் சமீபத்தில் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் அவர் பேசியபோது, தான் படித்துக்கொண்டிருந்தபோது பாம்பே ஐஐடியில் கேட்ட ஜோக் ஒன்றை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்த ஜோக் குறித்த செய்தி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் எப்படி இருக்கு..? தாலிபான்கள் கைப்பற்றி முழுசா 1 வருசம் ஆச்சு..!!

குமார் மங்கலம் பிர்லா

குமார் மங்கலம் பிர்லா

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சமீபத்தில் ஐஐடி மும்பையின் 60 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தலைமை விருந்தினர்

தலைமை விருந்தினர்

55 வயதான பிர்லா இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

தொழில்நுட்ப படிப்பு
 

தொழில்நுட்ப படிப்பு

மாணவர்கள் தொழில்நுட்பம் குறித்த படிப்பில் மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் மும்பை ஐஐடி என்பது மிகவும் சிறப்புக்குரிய தொழில்நுட்ப கல்லூரி என்றும் இதில் படித்த பல மாணவர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நண்பர்கள்

நண்பர்கள்

 

மேலும் ஐஐடி மும்பை மாணவர்களில் சிலர் தனது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்றும், அந்த நண்பர்களிடமிருந்து கேட்ட பல ஜோக்குகளை தன்னால் எப்படி மறக்க முடியும் என்றும் அவர் தனது மலரும் நினைவுகளை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.

ஜோக்

ஜோக்

அவ்வாறு கேட்ட எனக்கு பிடித்த ஜோக் ஒன்று தற்போது ஞாபகம் வருகிறது என்றும், ‘ஒரு ஆட்டோ டிரைவர் தனது தொலைந்து போன ஆட்டோவை நெடுநேரம் தேடிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த வளாகத்தில் வெளியேற முடிவு செய்து அங்கிருந்த ஒரு பிஎச்டி மாணவரிடம், ‘இங்கிருந்து வெளியேற என்ன வழி என்று கேட்டதாகவும் அதற்கு அந்த மாணவர், ‘கடந்த நான்கு வருடங்களாக நானும் அதைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று பதில் கூறியதாகவும் தெரிவித்தார். இந்த ஜோக்கை கேட்டவுடன் மாணவர்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் ஜோக்காக இருந்தாலும் இன்று பட்டம் பெறும் நீங்கள் அனைவரும் உங்களுக்கான வழியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்காது என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2551 பட்டங்கள்

2551 பட்டங்கள்

மும்பை ஐஐடி இந்த ஆண்டு மொத்தம் 449 பிஎச்டி பட்டங்களை வழங்கியுள்ளது. இது இந்தியாவில் STEM கல்வியில் இதுவரை இல்லாத மிக உயர்ந்த எண்ணிக்கை என்று கூறப்படுகிறது. மேலும் பிஎச்டி, பிடெக், எம்டெக், எம்எஸ்சி மற்றும் எம்ஃபில் பட்டங்கள் உட்பட, மொத்தம் 2324 மாணவர்களுக்கு மொத்தம் 2551 பட்டங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kumar Mangalam Birla reveals his favourite IIT Bombay joke!

Kumar Mangalam Birla reveals his favourite IIT Bombay joke! | ‘நானும் 4 வருடங்களாக தேடி கொண்டிருக்கின்றேன்…. தொழிலதிபர் பிர்லா கூறிய ஜோக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.