பத்ம விருது பெற்ற ஆம்பூர் பரிதா தோல் தொழிற்சாலை உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

ஆம்பூர்:  ஆம்பூர் பரிதா தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இரு தொழிற்சாலைகள  உள்பட அவர்களுக்கு சொந்தமான சுமார் 60 இடங்களில்  வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலை பத்ம விருது பெற்ற தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபரிதா தோல் நிறுவனத்தை மெக்கா இர்சாத் அகமது, மெக்கா ரபீக் அகமது, இஸ்ரார் அகமது ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 13 தோல் தொழிற்சாலைகள் உள்ளன.  மேலும் கே.எச் குரூப் நிறுவனத்திற்கு சொந்தமாகவும் பல இடங்களில் தோல் ஏற்றுமதி தொழிற்சாலைகள் உள்ளன. இந்த இரு நிறுவன அதிபர்களும் உறவினர்கள்.

இந்த நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில், வரி முறைகேடு தொடர்பான  சென்னை மற்றும் ஆம்பூரில் உள்ள ஃபரிடா மற்றும் கே.எச் குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அவர்களின் வீடுகள், உறவினர்களின் வீடுகள் என 60க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த ரெய்டில் சென்னை மற்றும் பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் என 150க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஃபரிடா நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.