பா.ஜ., நிர்வாகி சோனாலி போகத் மாரடைப்பால் மரணம்| Dinamalar

பனாஜி: ஹரியானாவை சேர்ந்த பா.ஜ., நிர்வாகியும், டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவருமான சோனாலி போகத் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 41. கோவாவில்,படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த சோனாலி போகத், ஓட்டலில் தங்கியிருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில், ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் சோனாலி போகத் களமிறங்கினார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வி அடைந்தார்.குல்தீப் பிஷ்னோய் சமீபத்தில் தனது எம்.எல்.ஏ., பதவியில் இருந்து ராஜினாமா செய்து காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.