சேலம்: சேலம் மாவட்டம் வாழைப்பாடி அருகே புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடன் நல விடுதியில் தங்கியிருந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சித்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையைல் கடந்த 4 நாட்களாக விடுமுறை தினத்தையொட்டி அவர்கள் ஊருக்குச் செல்வதாக விடுதியில் தெரிவித்து விட்டு அவர்கள் நண்பர்கள் வீட்டிற்கு சென்று அங்குள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இது குறித்து ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு மாணவிகளை காணவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். எனவே அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் மாணவிகளிடம் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவிகள் விடுதியில் வைத்திருந்த எலி பேஸ்ட் எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஸ்ரீ அபினவ் அவர்கள் நேரில் சந்தித்து மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை மேற்கொண்டு பின்னர் அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாணவிகள் தங்களை காத்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் பள்ளி மாணவிகளுக்கு தற்கொலை எண்ணம் வராத வகையில் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதை தொடர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.