போக்குவரத்து பாலத்தை தகர்த்த உக்ரைன்…உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட அத்துமீறல் என ரஷ்யா குற்றச்சாட்டு


ஸ்லாவியன்ஸ்கில் உள்ள சாலைப் பாலத்தை உக்ரைன் வெடிவைத்து தகர்த்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு.

பொதுமக்கள் உள்கட்டமைப்பு வசதிகளை ஷெல் செய்வதில் ரஷ்ய துருப்புக்கள் பங்கேற்கவில்லை என  மிஜின்ட்சேவ் தகவல்.

கசென்னி டோரெட்ஸ் ஆற்றின் குறுக்கே ஸ்லாவியன்ஸ்கில் உள்ள சாலைப் பாலத்தை உக்ரைன் வெடிவைத்து தகர்த்தியதாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலில், உக்ரைனிய படைகள் தடுப்பு தாக்குதல் மட்டுமே நடத்திய நிலையில், தற்போது ரஷ்ய இலக்குகள் மீது உக்ரைனின் ஆயுதப்படை வீரர்கள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில்,கசென்னி டோரெட்ஸ் ஆற்றின் (Kazenny Torets River) குறுக்கே ஸ்லாவியன்ஸ்கில் (Slavyansk) உள்ள சாலைப் பாலத்தை உக்ரைன் வெடிவைத்து தகர்த்துள்ளனர்

போக்குவரத்து பாலத்தை தகர்த்த உக்ரைன்...உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட அத்துமீறல் என ரஷ்யா குற்றச்சாட்டு | Ukraine To Destroy Transit Bridge Blame RussiaAFP

இதுத் தொடர்பாக பேசிய ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ், உக்ரேனிய ஆயுத அமைப்புகளின் போராளிகள் [சாலைப் பாலத்தை] தகர்க்க திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

மேலும் முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களுக்காக உக்ரைனை ஷ்யப் பிரிவுகள் குற்றம் சாட்டுகின்றனர் என்றும் மிஜின்ட்சேவ் (Mizintsev) குறிப்பிட்டார்.

போக்குவரத்து பாலத்தை தகர்த்த உக்ரைன்...உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட அத்துமீறல் என ரஷ்யா குற்றச்சாட்டு | Ukraine To Destroy Transit Bridge Blame RussiaEPA

கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…பயணிகள் குழப்பம்

இந்த போர் நடவடிக்கையில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு வசதிகளை ஷெல் செய்வதில் ரஷ்ய துருப்புக்கள் பங்கேற்கவில்லை என்றும், பொதுமக்களை மனிதாபிமானத்துடன் தொடர்ந்து நடத்துவதோடு, ஆதரவையும் உதவியையும் வழங்குவதாக மிஜின்ட்சேவ் மீண்டும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.