மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள் ரிஸ்க் நிறைந்ததா? என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்?

பொதுவாக நாம் முதலீடு செய்யும் அனைத்துமே ரிஸ்க் நிறைந்தது தான் என்பதும், ரிஸ்க் இல்லாத முதலீடு எதுவுமே இல்லை என்பதும் இயல்பான ஒன்று.

ஆனால் ரிஸ்க் அளவு எவ்வளவு என்பதை மட்டுமே ஒவ்வொரு முதலீட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எந்த அளவுக்கு ரிஸ்க் உள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.

IKEA நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்… வாடிக்கையாளர்களுக்கு இனி கொண்டாட்டம்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது என்பதும் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வதில் விழிப்புணர்வு மக்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்தால் பாதுகாப்பு குறைவு என்ற அச்சமும், அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் குறைந்தபட்ச வட்டி மட்டுமே கிடைக்கும் என்ற நிலையும் மக்களுக்கு நன்றாக புரிந்து உள்ளது.

10 முதல் 12 சதவீதம் வரை வருமானம்

10 முதல் 12 சதவீதம் வரை வருமானம்

இதனை அடுத்து வருடத்திற்கு 10 முதல் 12 சதவீதம் வரை வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஏராளமானோர் முன் வந்துள்ளனர் என்பதும் கடந்த சில ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிஸ்க்
 

ரிஸ்க்

ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதால் ரிஸ்க் இல்லை என்று சொல்ல முடியாது. குறுகிய காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களுக்கு கண்டிப்பாக ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதே நேரத்தில் நீண்டகால முதலீட்டை வைத்து பார்க்கும்போது அதில் மிகக் குறைந்த அளவு ரிஸ்க் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈக்விட்டி திட்டம்

ஈக்விட்டி திட்டம்

நீண்டகால முதலீட்டின்போது, சிறந்த வருவாயை வழங்கக்கூடிய திறன் ஈக்விட்டி திட்டங்களுக்கு உண்டு. பணவீக்கம் என்பது ஒரு ரிஸ்க் என்றாலும், இந்த பணவீக்கத்தையும் மீறி சிறந்த வருமானம் வரும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ்கள் உள்ளன என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எனவே, சில ரிஸ்க்குகளை எடுப்பதும் பலனளித்திடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

லிக்விட் ஃபண்ட்ஸ்

லிக்விட் ஃபண்ட்ஸ்

ஆனால் அதே நேரத்தில் ஈக்விட்டி ஃபண்ட்ஸ் உடன் இருக்கக் கூடிய ரிஸ்க்கை ஒப்பிடும் போது, லிக்விட் ஃபண்ட்ஸ் கணிசமான அளவில் குறைவான ரிஸ்க்கை கொண்டது என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. குறைந்த ரிஸ்க் எடுப்பதன் மூலம் நம்முடைய முதலீட்டை பாதுகாத்து கொள்வதோடு, எடுக்கப்பட்ட ரிஸ்க்குகளுக்கு ஏற்ப ரிட்டர்ன்களை உருவாக்குவதில் லிக்விட் ஃபண்ட்ஸ் மிகச்சிறந்த முதலீடு ஆகும்.

ரிஸ்க் எவ்வளவு?

ரிஸ்க் எவ்வளவு?

ஒவ்வொரு முதலீட்டாளர்களின் ரிஸ்க் கண்ணோட்டமும் வெவ்வேறாக இருக்கும். எனவே முதலீட்டை செய்வதற்கு முன்பு தங்களால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதை முதலீட்டாளர்கள் நன்கு புரிந்து கொண்டு அதன் பிறகு தகுந்த நிதி ஆலோசகரின் ஆலோசனையை பெற்று சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What are the General Risks of Investing in Mutual Funds?

General Risks of Investing in Mutual Funds | மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள் ரிஸ்க் நிறைந்ததா? என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.