பிஜ்னோர்: கடந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ரயில் பயணிகளுக்கு ரூ.62 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம், பிஜ்னோருக்கு 2 நாள் பயணமாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டியில், ‘ரயில்வே ரூ.100 செலவு செய்தால், பயணிகளிடம் இருந்து ரூ.45 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரயில்வே துறை ரூ.62 ஆயிரம் கோடியை பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பயணிகளுக்கு மானியமாக வழங்கியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை அக்டோபரில் தொடங்கும். மெட்ரோ ரயில்களை போலவே, இன்ஜின் இல்லாத புறநகர் மின்சார ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. ரயிலின் 2வது அல்லது 3வது பெட்டியில் இருந்து இவை இயக்கப்படும்,’ என்று தெரிவித்தார்.