இந்தியா, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்து வருவதாக, ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு உக்ரைன் வெளியுறவுத் துறை, இந்தியா ரஷ்யாவின் எண்ணெய்-ஐ வாங்கவில்லை, உக்ரேனியர்களின் ரத்தினை வாங்குவதாக அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தியாவிடம் இருந்து ரஷ்யா பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறது.
இந்தியா உக்ரைனின் ரத்தத்தினை வாங்குகிறது.. ரஷ்யா எண்ணெய் குறித்து ஆவேசம்..!
ரஷ்யாவின் எதிர்பார்ப்பு
ஏற்கனவே சில்லறை பொருட்கள் பலவற்றிற்கும் இந்திய ஏற்றுமதியாளர்களை அணுகிய நிலையில், தற்போது இன்னும் பல பொருட்களுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக மருத்துவ சாதனங்கள், மருந்துகள், கெமிக்கல்ஸ், தொழிற்துறை உபகரணங்கள், கார்மெண்ட்ஸ், பர்னிச்சர் மற்றும் ஜூவல்லரிகள் உள்ளிட்ட பலவற்றையும் ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பணம் செலுத்தும் முறை
இந்தியாவும், ரஷ்யாவும் பணம் செலுத்தும் வழிமுறைகள் குறித்து ஏற்கனவே விவாதித்து வரும் நிலையில், இது குறித்து மேலும் விவாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சரிசெய்யப்படும் பட்சத்தில் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான வணிகம், மேலும் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் கோரிக்கை
ரஷ்யாவின் சமீபத்திய அறிக்கையின் படி, மொத்தம் 71 கோரிக்கைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் இறக்குமதி சார்ந்ததாகும். இதில் சில சாத்தியமான ஏற்றுமதி வாய்ப்புககளும் உள்ளன.
இதில் மெஷினரி, பேப்பர், டெக்டைல்ஸ், மோட்டார் உதிரி பாகங்கள், மருத்துவ பொருட்கள், தோல் என பலவும் இந்த பட்டியலில் அடங்கும்.
இறக்குமதியும் அதிகம்
கடந்த ஏப்ரல் – ஜூன் 2022 காலகட்டத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 369.29% அதிகரித்து, 9.26 பில்லியன் டாலர் மதிப்பில் அதிகரித்துள்ளது. எனினும் ஏற்றுமதியானது 37.82% குறைந்து, 435.62 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியானது கணிசமாக அதிகரித்துள்ளது. அதுவும் மேற்கத்திய நாடுகளின் தடைக்கு மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் ஏற்றுமதி
ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதியினை அதிகரிக்க தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் இறக்குமதி சுமார் 7.9 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருளை இறக்குமதி செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 800% அதிகமாகும்.
நல்ல வாய்ப்பு
இறக்குமதி அதிகரித்துள்ள அதேசமயம் ஏற்றுமதியும் விரைவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் ரஷ்யாவின் இந்த எதிர்பார்ப்பானது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க போகும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
Russia seeks to expand imports from India
Russia seeks to expand imports from India/ரஷ்யாவின் எதிர்பார்ப்பு.. இந்தியாவை வெறித்து பார்க்கும் மேற்கத்திய நாடுகள்.. ஏன் தெரியுமா?