ரஷ்யா உக்ரைன் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை..! – UNICEF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

சில மாதங்களுக்கு முன்பாக ரஷ்யா உக்ரைன் இடையே கடும் போர் நிலவியது. இதில் பல்வேறு தரப்பினர் உயிர் இழந்தனர். சிலர் கை கால் உள்ளிட்ட தங்கள் உறுப்புகளை இழந்தனர். பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டது. உலகையே உலுக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த போரின் பொது உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து UNICEF அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வரலாற்றில் உலகின் மிகப்பெரும் போர் அழிவாக கருதப்படும் உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி 6 மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில் அதன் தாக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆரம்பத்தில் உக்ரைன் அரசை அடிபணிய வைப்பது மட்டுமே நோக்கம் என்றும், உக்ரைனின் ராணுவ தளவாடங்களை மட்டுமே தாக்குவதாகவும் கூறி வந்த ரஷ்யா மக்கள் குடியிருப்பு பகுதிகளையும் தாக்க தொடங்கியது. இதனால் உக்ரைனில் இருந்து பிற நாட்டு மக்கள், மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக சொந்த நாடுகளை சென்றடைந்தனர்.

போரின் தாக்கத்தால் உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக அடைக்கலம் தேடி அண்டை நாட்டு எல்லைகளை கடக்க தொடங்கினர். தனது சிறிய ராணுவத்தைக் கொண்டு ரஷ்யாவை எதிர்த்து வந்த உக்ரைன் உலக நாடுகளின் ஆதரவை கோரியது. பெயரளவில் எதிர்ப்பை மட்டுமே பல நாடுகள் பதிவு செய்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வந்தது.
இந்த போரில் இரு தரப்பு ராணுவத்தினரும் பலியாகியுள்ளனர். உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள மக்களுக்கு ரஷ்யா குடியுரிமை வழங்கி அப்பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளும் நடவடிக்கைகளில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் போர் நிறுத்தத்திற்கான சாதகமான பேச்சுவார்த்தைகள் முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
இதனால் சுமார் 1.50 கோடி மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை UNICEF வெளியிட்டுள்ளது. ஆம், 6 மாதங்களுக்கு முன் உக்ரைனில் ஏற்பட்ட போரால் குறைந்தது 972 குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருக்க கூடும் என UNICEF கூறி இருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.