ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான அரசு கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்த உடன் பல மாதங்களாகத் திட்டமிட்டு இருந்த உக்ரைன் மீதான போர்-ஐ அறிவித்து.
ரஷ்யா உக்ரைன் மீதான போரின் மூலம் உலக நாடுகளின் தடைகளை எதிர்கொண்ட நிலையில், ரஷ்யா-வை காட்டிலும் ரஷ்யாவை நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கும், பிற நாடுகள் தான் கடுமையான பொருளாதாரச் சரிவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனைகளை எதிர் கொண்டது.
இந்நிலையில் ஐரோப்பாவில் அடுத்த 5 முதல் 10 குளிர்காலத்தில் மிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ள உள்ளதாகப் பெல்ஜிம் பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட் 2022-23.. சாமானியர்களுக்கு பயனுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்!
பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தடை
ரஷ்யா மீது பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தடைகளை விதித்த ஐரோப்பிய நாடுகளைப் பழிவாங்கும் விதமாக ரஷ்யா எரிசக்தியை ஆயுதமாக்கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது ஐரோப்பா தனது எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்-க்கு ரஷ்யாவை நம்பியிருக்கும் வேளையில் அதன் விநியோகத்தை நிறுத்த உள்ளது ரஷ்யா.
ஐரோப்பா
இந்த முக்கியமான நேரத்தில் தான் ஐரோப்பாவில் குளிர்காலம் வருகிறது. வழக்கத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் ஐரோப்பாவில் வீடு முதல் அலுவலகம் வகையில் தட்பவெப்ப நிலையைச் சீர்படுத்த அதிகளவிலான எரிவாயு தேவைப்படும். இந்த நிலையில் 2வது முறையாக ரஷ்யா தனது எரிவாயு விநியோகத்தை நிறுத்த உள்ளது.
பெல்ஜியம் பிரதமர்
ஐரோப்பாவில் அடுத்த 5 முதல் 10 குளிர்காலங்கள் கடினமாக இருக்கும் என்று பெல்ஜியத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ கூறியுள்ளார். மேலும் அவர் பல துறைகளில் எரிபொருளின் அதிகப்படியான விலைகளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
இதேபோல் வரும் மாதங்கள் மக்களுக்கும் சரி, வர்த்தகத் துறைக்கும் சரி மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஐரோப்பாவில் வரவிருக்கும் குளிர்காலம் முதல் முறையாக மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் எச்சரித்துள்ளார்.
5 முதல் 10 குளிர்காலங்கள்
ஐரோப்பிய நாடுகள் தற்போது ரஷ்யா-விடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய், எரிவாயு-க்கு இணையாகப் பிற நாடுகளிடம் இருந்து வாங்க பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இதன் அளவை எட்ட கட்டாயம் 3 வருடங்களாவது ஆகும். அதுவரை ஐரோப்பாவுக்குப் பாதிப்பு தான் என்பதை 5 முதல் 10 குளிர்காலங்கள் என்பதைப் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ குறிப்பிடுகிறார்.
Gazprom நிறுவனம்
ரஷ்ய அரசு நடத்தும் எரிசக்தி நிறுவனமான Gazprom, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரையிலான மூன்று நாட்களுக்கு ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் முக்கியப் பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகம் செய்யும் Nord Stream 1 பைப்லைனை மூடுவதாக ரஷ்யா அறிவித்தது.
Nord Stream 1 பைப்லைன்
Nord Stream 1 பைப்லைனுக்குத் திட்டமிடப்படாத பராமரிப்புத் தேவைப்படுவதாக அறிவித்து Gazprom 3 நாட்களுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்த உள்ளது.இந்த பைப்லைன்-ஐ ஏற்கனவே 10 நாட்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 3 நாட்கள் மூட முடிவு செய்துள்ளது ரஷ்யா.
Europe going to face 5 to 10 difficult winters says belgium prime minister
Europe going to face 5 to 10 difficult winters says belgium prime minister ஐரோப்பாவுக்கு இனி போராட்ட காலம் தான்.. பெல்ஜிம் பிரதமர் அதிரடி..!