வாரந்தோறும் 2 நாட்கள் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மின்சாரத்தை மிச்சப்படுத்த வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று வங்க தேச அரசு உத்தரவிட்டு உள்ளது.

அண்டை நாடான வங்க தேசம், தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறி வருகிறது. இந்நிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயங்க செய்யவும், சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை, அமைச்சரவை செயலாளர் கண்டாகேர் அன்வருல் இஸ்லாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாளை முதல் அனைத்து அரசு, தன்னாட்சி அலுவலகங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும் என்றும், வங்கிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என்றும், மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும்படி அனைத்து அலுவலகங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அமைச்சரவை செயலாளர் அன்வருல் இஸ்லாம் தெரிவித்து உள்ளார். மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக ஏற்கனவே, கடைகள், வணிக வளாகங்களை இரவு 8 மணிக்கு மூடிவிடும்படி வங்கதேச அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடுப்பு சட்டம் – இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் தடை!

இது தொடர்பாக, வங்கதேச நாட்டின் கல்வித் துறை அமைச்சர் திபு மோனி கூறுகையில், “உலகளாவிய மின் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிகளவில் எரிபொருளைச் செலவழிக்கின்றன. பள்ளியில் படிக்கும் நாட்களைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.