வாலாஜாபாத் ஒன்றியம் கரூர் ஊராட்சியில் காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்; பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், கரூர் ஊராட்சி இங்கு 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் இ சேவை மைய கட்டிடம், நூலகம், அங்கன்வாடி மையம், ஆரம்பப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், இங்குள்ள மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்கள் பகுதிக்கு வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2018-19ம் ஆண்டிற்கான மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரூ.9.96 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன. இதனால் வரை இந்த சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதுகுறித்து, இப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் கரூர் ஊராட்சி இங்கு நிலத்தடி நீரை ஊராட்சி நிர்வாகம் குடிநீருக்காக வழங்கி வருகின்றன.

இது போதுமான அளவிற்கு மக்களுக்கு இல்லாத நிலையிலும் சுகாதாரமான குடிநீரை அருகாமையில் உள்ள ஊராட்சிகள் வழங்கி வரும் நிலையில் எங்கள் பகுதிக்கும் சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என தொடர்ந்து அதிகாரிகளை வலியுறுத்தி வந்தோம்.அதன் அடிப்படையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கரூர் பேருந்து நிறுத்தத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டன அமைக்கப்பட்ட நாளிலிருந்து இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் ஒரு காட்சி பொருளாகவே இங்கு உள்ளது. அரசு அதிகாரிகள் இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கினால்  செயல்படும்  என்ற நிலையில் உள்ளது.

இதனை அதிகாரிகள் உடனடியாக செயல்படாமல் நான்கு ஆண்டுகளாக அலட்சியப் போக்கில் காலம் தாழ்த்தி வந்துள்ள நிலையில்  தற்பொழுது இந்த சுத்திகரிப்பு நிலையம் எந்த நிலையில் உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளன. இதுபோன்ற, சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு மக்கள் சுகாதாரமான குடிநீரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அரசு ஊராட்சிகளுக்கு கொண்டுவரும் திட்டங்களை அதிகாரிகள் அலட்சியப்படுத்தாமல் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் வலியுறுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.