வேறவழியே இல்லை..ராகுல்தான் காங். தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்; இதனை ராகுல் நிராகரித்தால் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் விரக்தி அடைந்துவிடுவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை; அகில இந்திய தலைமையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது கலகக் குரல் எழுப்பிய ஜி 23 தலைவர்களின் கோரிக்கை. இதனை காங்கிரஸ் மேலிடம் முதலில் நிராகரித்து கொண்டே வந்தது.

கடந்த ஆண்டு 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பெரும் தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. இதனையடுத்து அக்கட்சியில் நாடு தழுவிய அளவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜி23 கலகக் குரல் குழுவினரும் கூட டெல்லி மேலிடத்தால் அழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்; அதுவரை சோனியா காந்தியே இடைக்கால தலைவராக இருக்கலாம் என்று ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூறி வந்தனர். இப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் விவாதம் களைகட்டி வருகிறது.

யார் காங். தலைவர்?

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தமக்கு வேண்டவே வேண்டாம் என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறி வருகிறார். இதனால் அடுத்த லோக்சபா தேர்தல் வரை சோனியா காந்தியே இடைக்கால தலைவராக அல்லது அகில இந்திய தலைவராக பதவி வகிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அரசு ஆட்டம்

மோடி அரசு ஆட்டம்

இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் டெல்லியில் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் பெருந்திரளாக தொண்டர்கள் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த சட்டசபைத் தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும். பீகாரில் நிதிஷ்குமார் கையில் எடுத்த வியூகம், ராகுல் காந்தியின் தொடர் போராட்டங்களால் மோடி அரசு ஆட்டம் கண்டுள்ளது.

மோடிக்கு ஏன் அச்சம்?

மோடிக்கு ஏன் அச்சம்?

கடந்த 75 ஆண்டுகளாக ஜனநாயகத்தை காங்கிரஸ் காப்பாற்றி வந்துள்ளது. இந்த தேசத்துக்கு காங்கிரஸ் கட்சி தந்த நன்கொடை இது. கடந்த 32 ஆண்டுகளாக சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து எவரும் பிரதமராகவும் இல்லை; மத்திய அமைச்சராகவும் இல்லை; முதல் அமைச்சராகவும் இல்லை. ஆனால் பிரதமர் மோடி இன்னமும் அந்த குடும்பத்தினரை கண்டு அச்சப்படுகிறார்.

அகில இந்திய தலைவர் பதவி

அகில இந்திய தலைவர் பதவி

காங்கிரஸ் கட்சியில் அனைவரது ஒருமித்த கருத்து என்பது ராகுல் காந்தி, கட்சியின் அகில இந்திய தலைவராக வேண்டும் என்பது. இதனை ராகுல் காந்தி நிராகரித்தால் கட்சித் தொண்டர்கள் விரக்தி அடைந்துவிடுவார்கள். ஆகையால் ராகுல் காந்தி எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.