ஹங்கேரி வர்த்தகத்தை விற்பனை செய்யும் வோடபோன்.. அப்போ இந்தியாவின் நிலை..?

பிரிட்டன் நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் சமீபத்தில் தனது ஹங்கேரி பிரிவை அந்நாட்டின் உள்ளூர் அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

1.8 பில்லியன் யூரோவுக்கு வோடபோன் தனது ஹங்கேரி பிரிவை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனை மூலம் ஹங்கேரி அரசுக்கு இரண்டாவது பெரிய லேண்ட்லைன் மற்றும் மொபைல் தொலைத் தொடர்பு துறை நிறுவனமாக உருவாகும் என்று வோடபோன் நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

வீழும் சூரியனாக வோடபோன் ஐடியா.. இனி அவ்வளவு தானா..?

வோடபோன்

வோடபோன்

இந்தியா உட்பட பல நாடுகளில் தொலைத்தொடர்பு சேவையை செய்து வரும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் நேற்று அதன் ஹங்கேரி பிரிவை விற்பனை செய்துள்ளது.

ஹங்கேரி

ஹங்கேரி

ஹங்கேரி அரசுக்கு சொந்தமான 4iG மற்றும் அரசுக்கு சொந்தமான ஹோல்டிங் நிறுவனமான Corvinus Zrt ஆகிய நிறுவனங்களுக்கு 1.8 பில்லியன் யூரோக்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் ஹங்கேரியின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்புத் துறையை அந்நாட்டின் அரசு ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேவை

சேவை

வோடபோன் நிறுவனத்திடமிருந்து தொலைத்தொடர்புத் துறை வர்த்தகத்தை பெற்ற 4iG மற்றும் Corvinus Zrt ஆகிய நிறுவனங்கள் ஹங்கேரியில் மிகவும் வலுவான மற்றும் முழுமையான ஆபரேட்டராக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும்.

வளர்ச்சி
 

வளர்ச்சி

இந்த முதலீடு ஹங்கேரி நாட்டின் தொலைத்தொடர்புத்துறை வளர்ச்சியின் அடையாளமாக கருதபடுகிறது. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தில் தேசிய அளவில் ஒரு பெரிய இலக்கை ஹங்கேரி அரசு இந்த வர்த்தகம் மூலம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடன் குறைப்பு

கடன் குறைப்பு

இது குறித்து வோடபோன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘வோடபோன் தனது கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கடனை குறைக்கவும் இந்த வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

மேலும் கடந்த சில ஆண்டுகளாக மறுசீரமைப்பு செய்து வரும் நிலையில் இந்த விற்பனை முடிவு செய்யப்பட்டதாகவும் இந்த விற்பனை 2022ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வோடபோன் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vodafone agrees to sell Hungary unit for 1.8 billion euros

Vodafone agrees to sell Hungary unit for 1.8 billion euros | ஹங்கேரி யூனிட்டை விற்பனை செய்கிறது வோடபோன்… எத்தனை பில்லியன் டாலர் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.