தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், கடந்த ஆறு அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவில் இருந்து வந்தது. எனினும் இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
டாலரில் சற்று தளர்வுகள் இருந்தாலும், இது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகித அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் காணமல் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
அதோடு தங்கம் விலையும் ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்ட நிலையில், அது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகத் தான் பார்க்கப்படுகிறது.
உண்மையில் தங்கம் விலையில் என்ன தான் நடக்குது.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?
ஒரு மாத சரிவில் தங்கம்
கடந்த ஜூலை 27 அன்று தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1727.01 டாலராக இருந்தது. இது கடந்த அமர்வில் 1747 என்ற லெவலையும் எட்டியது. ஆக கிட்டதட்ட ஒரு மாத சரிவினைக் கண்டுள்ளது.
டாலரின் மதிப்பும் சற்று தடுமாற்றம் கண்ட நிலையில், இது மற்ற கரன்சிதாரர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது. ஆக இது தங்கம் விலை பெரியளவில் சரியாமல் பார்த்துக் கொள்கிறது.
இன்னும் டைம் இருக்கு
அமெரிக்காவின் மத்திய வங்கியானது இன்னும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்வதற்கு கால அவகாசம் உள்ளது. செப்டம்பர் 20 – 21ல் தான் அவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. ஆக அதற்குள் பொருளாதாரம் எப்படி இருக்கிறது? பணவீக்கம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து வட்டி விகிதம் மாறலாம்.
எதிர்பார்ப்பு
செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்று ஒரு தரப்பினர் கணித்தாலும், ஒரு தரப்பு தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்தால் அது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் வட்டி அதிகரிப்பு இந்த முறை இருக்காது என்றும் கூறி வருகின்றது. மொத்தத்தில் இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கிகளின் முடிவு
அமெரிக்கா, இந்தியா மட்டும் அல்ல, ஐரோப்பிய மத்திய வங்கியும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது. அதுவும் இது ரெசசன் அச்சமே இருந்தாலும் கூட நடவடிக்கை தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல ஜெர்மனியும் பணவீக்கத்தின் மத்தியில் வட்டி அதிகரிப்பு நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில் வாங்கலாம்
தங்கம் விலையானது கிட்டதட்ட 1 மாத சரிவில் காணப்படும் நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் அதனை வாங்கி வைக்கலாம். இது மீடியம் டெர்மில் தங்கம் விலை ஏற காரணமாக இருக்கலாம். எனினும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் முடியும் வரையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றும், நீண்டகால நோக்கில் வாங்கி ஹோல்டு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
முக்கிய லெவலுக்கு கீழ்
தங்கம் விலை தொடர்ந்து அதன் முக்கிய லெவலான 1800 டாலர்களுக்கு கீழாகவே காணப்படுகின்றது. இது இன்னும் தங்கம் விலை குறையலாம் என்ற உணர்வினையே முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கடந்த 6 அமர்வுகளாகவே தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் தடுமாற்றத்தில் தான் காணப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 3.05 டாலர்கள் அதிகரித்து, 1751.40 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை அதிகரித்திருந்தாலும், வெள்ளி விலை சற்று குறைந்து, 18.852 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் தங்கம் விலையானது முடிவில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதே வெள்ளி விலை கடந்த அமர்வில் சற்று சரிவிலேயே முடிவடைந்துள்ளது.இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று குறைந்து தான் காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 4800 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 38,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5202 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,616 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, 52,020 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 80 பைசா குறைந்து, 60.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 607 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, 60,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,000
மும்பை – ரூ.47,590
டெல்லி – ரூ.47,750
பெங்களூர் – ரூ.47,640
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.47,590
gold price on 23rd August 2022: gold prices edges higher after hitting a near 1 month low
gold price on 23rd August 2022: gold prices edges higher after hitting a near 1 month low / 1 மாத சரிவுக்கு பிறகு தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. வாங்க ரெடியா இருங்க?