85 வயதில் இளமைத் தோற்றத்துடன் காணப்படும் இலங்கைப் பெண்… ஜேர்மனியில் சந்தித்த அனுபவங்கள்


இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு குடிபெயர்ந்த அந்தப் பெண்ணுக்கு இப்போது 85 வயது ஆகிறது.

இன்னமும் அவரைப் பார்ப்பவர்கள் அவருக்கு 85 வயது என்பதை நம்ப மறுக்கிறார்கள்.
 

அவரது பெயர் ஜூன் கிரெய்னர் (June Greiner. ஜூன் என்பது அவர் பிறந்த மாதம் என்பதால் அதுவே அவரது பெயராகிவிட்டதாம். 

85 வயது ஆகும் நிலையிலும், வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறது என்கிறார் ஜூன்.

இலங்கையில், கொழும்புவிலுள்ள Goethe Instituteஇல் பணியாற்றும்போது, அந்நிறுவனத்தின் தலைவரான Dr. Dietrich Greinerஐ சந்தித்திருக்கிறார் ஜூன். அப்போதே Dr. Dietrichக்கு இரண்டு பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். அவரைத் திருமணம் செய்துகொண்ட ஜூன் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை.

85 வயதில் இளமைத் தோற்றத்துடன் காணப்படும் இலங்கைப் பெண்... ஜேர்மனியில் சந்தித்த அனுபவங்கள் | Young Looking Sri Lankan Girl

image – island.lk

தன் பிள்ளைகளுக்காக Dr. Dietrich ஜேர்மனிக்கு திரும்ப முடிவு செய்தபோது, ஜூனும் அவருடன் ஜேர்மனிக்கு வந்திருக்கிறார். 40 வயதில் மொழி தெரியாத புதிய ஒரு நாட்டில் புதிய வாழ்க்கையைத் துவங்குவது கடினமாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை கொண்ட ஜூனுக்கு அவரது நம்பிக்கையே பலத்தைக் கொடுத்திருக்கிறது.

சீக்கிரத்தில் ஆங்கில வகுப்புகள் எடுக்கத் துவங்கிய ஜூன், தேவாலயத்தில் பாடகர் குழுவின் தலைவராகும் அளவுக்கு வேகமாக தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜூனுடைய கணவரான Dr. Dietrich மரணமடைந்துவிட்டார்.

Schwaebisch Hall என்ற இடத்தில் வாழும் ஜூன் இப்போதும் ஆங்கில வகுப்புகள் எடுக்கிறார்.

பெரும்பாலும், விசேஷ நிகழ்வுகளில் தன் பாரம்பரிய உடையான புடவை அணிந்துவருவது ஜூனின் தனித்தன்மை. அவரைப் பார்ப்பவர்கள், இப்போதும், உங்களுக்கு 85 வயதா, நம்ப முடியவில்லை என்கிறார்கள்.

இலங்கையிலிருக்கும் தன் உடன்பிறந்தோருடன் இப்போதும் தொடர்பிலிருக்கிறார் ஜூன். அவர் இப்போது இலங்கைக்குச் சென்றாலும் அவரைப் பார்ப்பவர்கள் சொல்லும் ஒரே விடயம், உங்களுக்கு 85 வயதா, நம்ப முடியவில்லை என்பதுதான்!
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.