ஸ்வீடன் நாட்டின் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனமான IKEA ஏற்கனவே இந்தியாவில் ஐந்து இடங்களில் கடைகளை திறந்து உள்ள நிலையில் தற்போது சிறிய நகரங்களிலும் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் தனது சில்லறை விற்பனைக் கடையை திறந்து மக்களின் பேராதரவை IKEA பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது மற்றும் சிறிய நகரங்களிலும் கடையை திறப்பது போன்ற திட்டத்தை IKEA நிறுவனம் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்று ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் ஐடி பணி… இன்று ரூ.199க்கு பீட்சா விற்கும் முதலாளி!
சிறிய நகரங்களில் IKEA
இதுகுறித்து IKEA நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறிய போது, ‘எங்களுடைய மெகா ஸ்டோர்களை சிறிய நகரங்களுக்கு விரிவுபடுத்தவும், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் திட்டமிட்டு வருகிறோம் என்றும் மிக விரைவில் இதை செயல்படுத்த உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் IKEA
இந்தியாவில் IKEA நிறுவனம் கடைகளை திறப்பதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு ரூ.10,500 கோடி முதலீடு செய்ய அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குள் 10 கடைகளை திறக்க திட்டமிட்டபோதும், இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் 5 கடைகளை மட்டுமே திறந்துள்ளது.
விரிவுபடுத்த திட்டம்
இந்த நிலையில் IKEA கடைகளை மேற்கொண்டு விரிவுபடுத்தும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக IKEA இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சுசன்னே புல்வெரர் தெரிவித்துள்ளார். மக்கள் இருக்கும் இடத்திற்கு முன்னோக்கி நம்முடைய வியாபாரத்தை நெருக்கமாக எடுத்து செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகவும் இந்திய சில்லறை விற்பனையில் இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டோர் டெலிவரி
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது சில்லரை விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லா பொருட்களையும் உடன் எடுத்து செல்ல விரும்புவதில்லை என்றும் அவர்கள் டோர் டெலிவரி செய்ய விரும்புகிறார்கள் என்றும் அதை நாங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு செய்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறிய நகரங்களில் கவனம்
மேலும் சிறிய நகரங்களிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்றும் முதற்கட்டமாக குஜராத்தில் உள்ள மூன்று நகரங்களில் ஆன்லைன் மூலம் தற்போது வியாபாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் விரைவில் குஜராத்தில் கிளைகளை அமைக்க திட்டமிட்டு உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சேவை
பெரிய நகரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பதையும் தாண்டி சிறு நகரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் சிறுநகரங்களில் உள்ள மக்களுக்கும் சேவை செய்ய உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன்
புனே, அகமதாபாத், சூரத் போன்ற நகரங்களில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் மற்றும் செயலி மூலம் ஆன்லைனில் தற்போது IKEA தனது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இன்னும் சில நகரங்களுக்கும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. வெகுவிரைவில் சிறிய நகரங்களிலும் IKEA கிளைகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IKEA to open small city outlets along with mega formats in India
IKEA to open small city outlets along with mega formats in India | IKEA நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்… வாடிக்கையாளர்களுக்கு இனி கொண்டாட்டம்!