NDTV பங்குகளை கைப்பற்றும் அதானி குழுமம்.. முகேஷ் அம்பானி உடன் போட்டி..!

டெல்லி: இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் அதானி குழுமம் மீடியா துறையில் இறங்குவதற்காகச் சில மாதங்களுக்கு முன்பு ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் என்னும் நிறுவனத்தை உருவாக்கியது.

இந்த நிறுவனத்தின் வாயிலாக முகேஷ் அம்பானியின் நெட்வொர்க் 18 உடன் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறுவனத்தைத் துவங்கி பெரிய அளவிலான கைப்பற்றல்களையோ அல்லது முதலீடுகளையோ செய்யாமல் இருந்த ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அசத்தியுள்ளது.

கமிஷன் போர்-ஐ துவங்கிய ஜியோ.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..?

ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்

ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்

ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்-ன் துணை நிறுவனமான தான் இந்த விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (விசிபிஎல்) NDTV நிறுவனத்தின் ப்ரபோட்டர் குரூப் ஆக விளங்கும் RRPR ஹோல்டிங் பிரைவேட்டின் லிமிடெட் நிறுவனத்தின் 99.5% ஈக்விட்டி பங்குகளைப் பெறுவதற்கான உரிமையைப் பயன்படுத்தியுள்ளது. விஸ்வபிரதான் கமர்ஷியல் ஏற்கனவே RRPR ஹோல்டிங்-ன் வாரன்களை வைத்திருந்தது.

RRPR ஹோல்டிங் நிறுவனம்

RRPR ஹோல்டிங் நிறுவனம்

RRPR ஹோல்டிங் நிறுவனம் NDTV நிறுவனத்தில் சுமார் 29.18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், தற்போது விஸ்வபிரதான் கமர்ஷியல் 99.5% ஈக்விட்டி பங்குகளையும் கைப்பற்றும் பட்சத்தில் அதானி குழுமம் மறைமுகமாக NDTV நிறுவனத்தில் சுமார் 29.18 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

NDTV நிறுவனம்
 

NDTV நிறுவனம்

இது மட்டும் அல்லாமல் NDTV நிறுவனத்தில் கூடுதலாக விஸ்வபிரதான் கமர்ஷியல், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், அதானி எண்டர்பிரைசர்ஸ் ஆகியவை இணைந்து சுமார் 26 சதவீத பங்குகளை ஓப்பன் ஆஃப்ர் முறையில் வாங்கும் விருப்பத்தை முன்வைத்துள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

இதுவும் ஒப்புதல் பெரும் பட்சத்தில் அதானி குழும நிறுவனங்கள் NDTV நிறுவனத்தில் சுமார் 55.18 சதவீத பங்குகளைக் கைப்பற்றி நிர்வாகக் குழுவில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தும். இதன் மூலம் நிர்வாக முடிவுகள், வர்த்தக முறை என அனைத்திலும் அதானி குழுமம் NDTV நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

3 சேனல்கள்

3 சேனல்கள்

NDTV நிறுவனம் சுமார் 30 வருடங்களாகச் செய்தி ஊடகத்தில் இயங்கி வருகிறது, இந்நிறுவனம் NDTV 24×7, NDTV India and NDTV
Profit ஆகிய 3 செய்தி சேனல்களை வைத்துள்ளது. டிவி, சோஷியல் மீடியா என மொத்த 35 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது NDTV நெட்வொர்க்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

NDTV-யின் போட்டி நிறுவனமான மனிகன்ட்ரோல் நிறுவனத்தை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வைத்துள்ளது. NDTV நிறுவனம் 2022ஆம் நிதியாண்டில் 421 கோடி ரூபாய் அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது. மொத்த லாபமாக 85 கோடி ரூபாயை பெற்றுள்ளது. NDTV நிறுவனத்தில் மிகவும் குறைந்த அளவிலான கடன் மட்டுமே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani Group company indirectly acquire 29.18 percent stake in NDTV & launch Open Offer

Adani Group company indirectly acquire 29.18 percent stake in NDTV & launch Open Offer NDTV பங்குகளைக் கைப்பற்றும் அதானி குழுமம்.. முகேஷ் அம்பானி உடன் போட்டி..!

Story first published: Tuesday, August 23, 2022, 18:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.