சென்னை
:
நடிகர்
தனுஷ்
நடித்துள்ள
வாத்தி
படத்தின்
ரிலீஸ்
தேதி
குறித்த
முக்கியமான
அறிவிப்பை
படக்குழு
வெளியிட்டுள்ளது.
நடிகர்
தனுஷ்
தெலுங்கில்
முதல்முறையாக
நடித்து
வரும்
‘சார்’
என்கிற
திரைப்படம்
தமிழில்
‘வாத்தி’
என்கிற
பெயரில்
இருமொழி
படமாக
உருவாகி
வருகிறது.
கிட்டத்தட்ட
இறுதிகட்டத்தை
எட்டியுள்ள
இந்தப்
படத்தை
சித்தாரா
என்டர்டெயின்மென்ட்ஸ்
மற்றும்
ஃபார்ச்சூன்
ஃபோர்
சினிமாஸ்
சார்பில்
நாகவம்சி
மற்றும்
சாய்
சவுஜன்யா
ஆகியோர்
தயாரித்து
வருகின்றனர்.
நடிகர்
தனுஷ்
நடிகர்
தனுஷ்
நடித்த
கர்ணன்
திரைப்படத்திற்கு
பிறகு
திரையரங்கில்
வெளியாகி
இருக்கும்
திரைப்படம்
திருச்சிற்றம்பலம்
இத்திரைப்படத்தில்
நித்யாமேனன்,
பிரியா
பவானி
ஷங்கர்,
ராஷிகண்ணா,
நடிகர்கள்
பிரகாஷ்ராஜ்,
பாரதிராஜா
ஆகியோர்
முக்கிய
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.
நீண்ட
நாட்களுக்கு
பிறகு
தனுஷ்
படத்திற்கு
அனிருத்
இசையமைத்துள்ளார்.
மித்ரன்
ஆர்
ஜவஹர்
இயக்கத்தில்
கடந்த
வாரம்
வெளியான
இத்திரைப்படம்
கலவையான
விமர்சனங்களை
பெற்று
வருகிறது.
வாத்தி
தற்போது
தனுஷ்
நடித்து
வரும்
வாத்தி
படத்தை
வெங்கி
அட்லூரி
இயக்குகிறார்.
இந்தப்
படத்தில்
சம்யுக்தா
மேனன்,
சமுத்திரக்கனி,
தோட்டப்பள்ளி
மது,
நர
ஸ்ரீனிவாஸ்,
பம்மி
சாய்,
ஹைப்பர்
ஆதி,
ஷாரா,
ஆடுகளம்
நரேன்,
இளவரசு,
மொட்ட
ராஜேந்திரன்,
ஹரீஷ்
பெராடி,
பிரவீணா
மற்றும்
பலர்
நடிக்கின்றனர்.
படத்திற்கு
ஜி.வி.பிரகாஷ்
இசையமைக்கிறார்.
கவனம்
ஈர்த்த
வசனம்
தனுஷின்
பிறந்தநாளை
முன்னிட்டு
வாத்தி
படத்தின்
டீசர்
வெளியாகி
பெரும்
வரவேற்பை
பெற்றது.
குறிப்பாக
படிப்பு
என்கிறது
பிரசாதம்
மாதிரி..
குடுங்க.
அத
பைவ்
ஸ்டார்
ஹோட்டல்
சாப்பாடு
மாதிரி
விற்காதீங்க..’
என்ற
வசனங்களை
ரசிகர்கள்
கொண்டாடினர்.
இந்தப்
படத்தில்
தனுஷ்
ஒரு
விரிவுரையாதராக
நடிக்கிறார்.
தமிழ்,
தெலுங்கு
என
இரண்டு
மொழிகளிலும்
ஒரே
நேரத்தில்
தயாராகும்
இந்தப்
படம்
கல்வி
அமைப்பை
மையப்படுத்தி
உருவாக்கப்பட்டுள்ளது.
மாஸ்
அப்டேட்
இந்நிலையில்,
வாத்தி
திரைப்படத்தை
தமிழகம்
முழுவதும்
வெளியிடுவதற்கான
விநியோக
உரிமையை
கோபுரம்
பிலிம்ஸ்
அன்புச்
செல்வன்
கைப்பற்றியுள்ளார்.
தமிழ்,
தெலுங்கு
ஆகிய
மொழிகளில்
இப்படம்
டிசம்பர்
9
ஆம்
தேதி
வெளியாகலாம்
என
கூறப்படுகிறது.அன்பு
செழியன்
சிவகார்த்திகேயன்
நடித்தவரும்
பிரின்ஸ்
என்ற
திரைப்படத்தின்
உரிமையையும்
வாங்கியிருக்கிறார்
என்பது
குறிப்பிடத்தக்கது.