அதானி குழுமத்தின் கடன் சுமை அதிகரிப்பு: கிரெடிட் சைட்ஸ்

மும்பை: பல்வேறு புதிய துறைகளில் அதானி குழுமம் மேற்கொண்ட பெரும் முதலீடுகளால் பெரும் கடன் சுமைகளில் சிக்கியுள்ளது என்று தனியார் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. ஆசியாவின் முதன்மை பணக்காரரான அதானி நாடு முழுவதும் துறைமுக தொழிலை விரிவு படுத்தி வரும் வேலையில் பல்வேறு புதிய துறைகளிலும் முதலீடுகளை அதிகரித்து வருகிறார். பெரும்பாலான புதிய முதலீடுகளை கடன் பெற்றே அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது. இதனால், பெரும் கடன் நெருக்கடியில் அதானி குழுமம் சிக்கியுள்ளதாக கிரெடிட் சைட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

புதிய முதலீடுகளால் அதானி குழுமத்தின் பண புழக்கம் கடுமையாக சரிந்துள்ளது. சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடும் போட்டி நிர்வாக சிக்கல்கள் இஎஸ்டி எனப்படும் சமூக சூழலிய ஆபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அதானி குழுமத்தின் கடன் சுமை பெருகி உள்ளதாக கிரெடிட் சைட்ஸ் விவரித்துள்ளது. எனினும், வங்கிகளுடனான நெருக்கமான பிணைப்பு, பிரதமர் நரேந்திர மோடி உடனான நட்புறவு போன்ற காரணிகளால் அதானி குழுமம் பாதுகாப்பான சூழலில் தான் உள்ளது என்றும் கிரெடிட் சைட்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.