ஆப்கானிஸ்தான் நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில், கடந்த சில வாரங்களாக, தொடர் மழை பெய்து வருகிறது. சுமார் 10 மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, நாட்டையே துவம்சம் செய்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.
சாலைகளில் வெள்ள நீர் வழிந்தோடுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக, பொது மக்கள் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே, கனமழை மற்றும் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை, 100 ஆக அதிகரித்து உள்ளது. மேலும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, 100ஐ தாண்டி உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கியூபாவையும் விட்டு வைக்காத குரங்கம்மை..! – முதல் பாதிப்பு நிலவரம்..!
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான இயற்கை பேரிடர்கள் மற்றும் தட்பவெப்பநிலை சார்ந்த நிகழ்வுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜூனில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.