இந்தியாவில் முதற்கட்டமாக சென்னை உள்பட 13 நகரங்களில் 5ஜி சேவை செப்டம்பரில் அறிமுகம்…

டெல்லி: இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம்   முடிவடைந்த நிலையில், முதற்கட்டமாக சென்னை  13 நகரங்களில் 5ஜி சேவை  செப்டம்பர் மாதம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக நடைபெற்ற ஏலம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது. அதாவது 5ஜி அலைக்கற்டிற ஏலம்  கடந்த ஜூலை 26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக நடைபெற்ற ஏலம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5G அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதாவது, ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக அதானி குழும நிறுவனம் 212 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இதுகுறித்து கூறிய மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரூ.1 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5G அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார். மேலும்,  அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் 5G சேவை இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் நல்ல கவரேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் சேவை வழங்கும்படி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களிடமிருந்து முதலாம் ஆண்டு தவணையாக ரூ.13,365 கோடி அரசு பெறும் என தெரிவித்தவர்,  அலைக்கற்றைகளை நிறுவனங்களுக்கு ஆகஸ்ட்10க்குள் ஒதுக்கப்படும். செப்டம்பர் மாதத்தில் 5ஜி சேவை வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதி தெரிவித்தார்.

இந்த நிலையில், 5ஜி அலைக்கற்றை சேவை சென்னை உள்பட 13 மாவட்டங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதன்படி, தலைநகர் டெல்லி, சென்னை, பெங்களூரு, சண்டிகர், அகமதாபாத்,  காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய நகரங்களில் விரைவில் 5ஜி இணைய சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 13 நகரங்களில், அகமதாபாத்,  காந்திநகர், குருகிராம் ஆகிய 3 நகரங்களும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.