இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!: நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு யோசனை..!!

டெல்லி: இலவசங்கள் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு யோசனை தெரிவித்துள்ளது. தோ்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடா்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய என்ற வழக்குரைஞா் பொதுநல வழக்கு தொடா்ந்துள்ளாா். அதில், நடைமுறைக்கு ஒத்துவராத இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அதன் பதிவை ரத்து செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென அவா் கூறியிருந்தாா்.

இந்த வழக்கில் திமுக தன்னையும் ஒரு தரப்பாக சோ்க்க கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி சி.டி.ரவிகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடங்கிய உடனேயே ஒன்றிய அரசின் சார்பில் ஆஜராகியிருந்த சொலிசிட்டி ஜெனரல் துஷார் மேத்தா, இலவசங்கள் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு தயாராக உள்ளது.

இது தொடர்பான முடிவை உச்சநீதிமன்றம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதே கருத்தை வழக்கை தொடர்ந்திருந்த அஷ்வினி உபாத்யா சார்பிலும் முன்வைக்கப்பட்டது. இலவசங்கள் தொடர்பாக ஒன்றிய அரசு அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க கூடாது? என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது. அதேசமயம் குழு அமைக்க தாங்கள் தயாராக இருந்தாலும், அந்த குழுவுக்கு தலைமை தாங்க யாரை நியமிப்பது என்று மிகப்பெரிய கேள்வி எழுகிறது.

எனவே அவசரகதியில் முடிவெடுக்க நாங்கள் தயாராக இல்லை என தெரிவிக்கப்பட்டது. இலவசங்கள் தொடர்பாக ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் நிபுணர் குழு அமைக்கலாம் என பரிந்துரைத்த நிலையில் ஒன்றிய அரசும் யோசனை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது, தோ்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மிகவும் தீவிரமான பிரச்னை.

ஆனாலும், சட்டமியற்றும் அதிகாரத்தில் என்னால் தலையிட முடியாது. இலவசத்துக்கும் நலத் திட்டத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது. இலவச திட்டத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பையும், நலத் திட்ட நடைமுறையையும் ஈடுசெய்ய வேண்டியது அவசியம். அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது ஜனநாயக விரோதமான செயல் என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தாா்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.