ரஷ்யா – உக்ரைன் போர் முடியாத நிலையில் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ரஷ்ய படைகள் முன்னேறி வருகிறது. உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளைத் தொடர்ந்து பன்னாட்டு நிதியுதவி, ஆயுத உதவிகள் மூலம் கட்டுப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிந்த 6 மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்கா உக்ரைனுக்கு அதுவரை அளிக்கப்படாத அதிகப்படியான தொகையை security assistance package ஆக அறிவித்துள்ளது.
அதுவும் உக்ரைன் நாட்டுக்கு மிகவும் ஸ்பெஷலான நாளில் அமெரிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது வியப்பு அளிக்கிறது.
உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்..? 12.4 டிரில்லியன் டாலர்..!
ரஷ்யா – உக்ரைன் போர்
பிப்ரவரி மாதம் துவங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து நடந்து வரும் வேளையில் உக்ரைன் நாட்டின் சுதந்திர நாளான இன்று ரஷ்யா என்ன செய்யக் காத்திருக்கிறதோ என்று அந்நாட்டு அரசும், மக்களும் எதிர்பார்த்து அச்சத்துடன் காத்திருக்கும் நிலையில் அமெரிக்காவிற்கு முக்கிய அறிவிப்புப்பு வெளியிட்டு உள்ளது.
சுதந்திர நாள்
உக்ரைன் நாட்டின் சுதந்திர நாளான இன்று அமெரிக்கா இதுவரை அளிக்கப்படாத வகையில் சுமார் 3 பில்லியன் டாலர் தொகையைப் பாதுகாப்பு உதவி தொகையாக அறிவிக்க உள்ளது. இதற்கு முன்பு 1 பில்லியன் டாலர் அளவில் பல முறை அளித்திருந்தாலும் 3 பில்லியன் டாலர் என்பது மிக்பெரிய தொகை.
ஜோ பைடன்
இந்தத் தொகுப்பு உக்ரைன் பாதுகாப்பு உதவி முன்முயற்சியிலிருந்து (USAI) அந்நாட்டு அரசாள் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் ஜோ பைடன் நிர்வாகம் தற்போதுள்ள அமெரிக்க ஆயுதப் இருப்பில் இருந்து ஆயுதங்களை எடுப்பதற்குப் பதிலாகத் தொழில்துறையிலிருந்து ஆயுதங்களை வாங்க அனுமதிக்கிறது.
புதிய ஆயுதங்கள்
புதிய ஆயுதங்கள் உக்ரேனிய இராணுவத்திற்கு முன்னர் வழங்கப்படாத ஆயுத வகைகளைச் சார்ந்து இருக்காது எனத் தெளிவாக அறிவிக்கப்பட்டு உள்ளது நிலையில், இது வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற நடுத்தரக் கால நோக்கங்களில் கவனம் செலுத்தும் ஆயுத கொள்முதலாக இருக்கும் என்று அதிகாரி கூறினார்.
அமெரிக்க அரசு
அமெரிக்கா பிப்ரவரி 24 முதல் உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்திற்குச் சுமார் 10.6 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இராணுவ உதவியை வழங்கியுள்ளது.
டாலர் – ரூபாய் – யூரோ
2023 ஆம் ஆண்டில் 500 மில்லியன் யூரோ மதிப்பிலான வான் பாதுகாப்பு அமைப்புகள், ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் துல்லியமான வெடிமருந்துகள் உட்படப் பல ஆயுதங்களை உக்ரைன் நாட்டுக்கு வழங்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.
USA to announce $3 billion in new military aid for Ukraine
USA to announce $3 billion in new military aid for Ukraine உக்ரைன்-க்குக் குட்நியூஸ்.. முக்கிய நாளில் முக்கிய அறிவிப்பு.. அசத்தும் அமெரிக்கா..!