உதவி இயக்குனரை அடித்த சீரியல் நடிகர்… பாதியில் நின்றது ஷூட்டிங்

ஷூட்டிங்கிங்கு அழைத்த உதவி இயக்குனரை சீரியல் நடிகர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாடே சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் நவீன். அதற்கு முன்பு தமிழில் பூலோகம் பட்டாஸ்’ மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும், நவீனுக்கு அடையாளத்தை கொடுத்தது சீரியல் தான்

இதயத்தை திருடாதே சீரியலுக்கும் நடிகர் நவீனுக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வந்த நிலையில். சமீபத்தில் இந்த தொடர் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து செய்திவாசிப்பாளரான கண்மணி என்பரை திருமணம் செய்துகொண்ட நவீன், தற்போது மீண்டும் கலர்ஸ் தமிழின் கண்ட நாள் முதல் சீரியலில் நடித்து வருகிறார்.

இரண்டு ஹீரோ தொடர்பான இந்த சீரியலில் மற்றொரு நாயகனாக அருண்ராஜன் நடித்து வருகிறார். குறுகிய காலத்தில் மக்களின் மனதில் இடம்பிடித்த இந்த சீரியல் தற்போது கலர்ஸ் தமிழின் முக்கிய சீரியலாக மாறியுள்ளது. தற்போது இந்த சீரியலின் ஷூட்டிங் சென்னை கிருஷ்ணா நகரில் நடைபெற்று வந்த நிலையில், உதவி இயக்குனருடன் ஏற்பட்ட தகராறில் நடிகர் நவீன் அவரை அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கிய ஷூட்டிங்கில், நவீன் வர தாமதமாகதாகவும், உதவி இயக்குனர் குலசேகரன் என்பரை அவரை அழைக்க சென்றபோது இருவருக்கும் வாக்குவாமாகி நவீன் குலசேகரனை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீரியல் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், காயம்பட்ட குலசேகரனுக்கு இரத்தம் வந்ததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சின்னத்திரை இயக்குநர் சங்கத்திலும். சென்னை மதரவாயில் காவல்நிலையத்திலும் உதவி இயக்குநனர் குலசேகரன் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். நவீன் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா அல்லது விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.